கொரோனா 2வது அலையில் ஏற்பட்டு உள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சரி செய்யவும், நாட்டின் பொருளாதாரத்தைச் சரிவில் இருந்து வளர்ச்சி பாதைக்குத் திரும்பக் கொண்டு வருவதற்கு ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் நிதியியல், நாணயம், துறைவாரியான கொள்கை என அனைத்து பிரிவுகளிலும் மாற்றங்கள் மற்றும் தளர்வுகளைக் கோரியுள்ளது.
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்
கொரோனா 2வது அலை தொற்று மூலம் 2021ஆம் ஆண்டின் ஏப்ரல் - மே மாதத்தில் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவை அதிகளவில் பாதித்தது. இந்தச் சூழ்நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் நாணய கொள்கை மறுசீரமைப்புச் செய்ய வேண்டும் என நாணய கொள்கை கூட்டத்தில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
கொரோனா அலை பாதிப்பை
2வது கொரோனா அலை பாதிப்பைச் சரி செய்ய நீண்ட காலத் திட்டத்தை விடவும் குறுகிய காலத் திட்டம் மிகவும் அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை இயல்பு நிலைக்குத் திருப்ப நிதியியல், நாணயம், துறைவாரியான கொள்கை என அனைத்து பிரிவுகளிலும் மாற்றங்கள் மற்றும் தளர்வுகள் உடனடியாகச் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
கொரோனா பிரச்சனை குறைந்தது
தற்போது நாட்டின் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையிலும், வேக்சின் அளிக்கும் பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ள பணிகளும் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
லாக்டவுன் கட்டுப்பாடுகள்
ஆனால் 2வது கொரோனா தொற்று அலையைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் ஏப்ரல் முதல் மே மாதம் வரையில் லாக்டவுன் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியது. இதனால் பெரும்பாலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது ஆனால் முதல் லாக்டவுன் போல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார வளர்ச்சி கணிப்புகள்
2020 ஜூன் காலாண்டில் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதில் நாட்டின் பொருளாதாரம் -23.9 சதவீதம் வரையில் சரிந்தது. இந்நிலையில் 2021 ஜூன் காலாண்டில் -12 சதவீதமாக இருக்கும் என UBS கணித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications