தனியார் மற்றும் அரசு காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு (இன்ஸ்யூரன்ஸ்) பாலிசி எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து பல்வேறு வழிகளில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் இன்ஸ்யூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக தற்போது அதிகமான மக்கள் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுத்து வருகின்றனர்.
அதேசமயம் இன்ஸ்யூரன்ஸ் எடுப்பது பெரிய விஷயம் அல்ல, பாலிசி எடுக்கும்போது நம்மை பற்றிய முழுவிவரத்தையும் ஒளிமறைவு இல்லாமல் தெரிவிக்க வேண்டியதும் அவசியம். ஏதாவது ஒரு விஷயத்தை மறைத்தால் அதுவே பின்னால் இழப்பீடு கோரிக்கையை நிராகரித்து இன்ஸ்யூரன்ஸின் பலனை கிடைக்காமல் செய்து விடும்.

இதற்கு உதாரணமாக ஹரியானாவில் நடந்த சம்பவத்தை கூறலாம். ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் 2013ம் ஆண்டில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக்கத்திடமிருந்து (எல்ஐசி) ஜீவன் ஆரோக்கிய பாலிசியை வாங்கியுள்ளார். இன்ஸ்யூரன்ஸ் வாங்கும்போது அதற்கான விண்ணப்பத்தில் அவர் நீண்ட கால மது அருந்தி வரும் தகவலை தெரிவிக்கவில்லை.
அடுத்த சில மாதங்களில் அவர் கடுமையான வயிற்று வலி காரணமாக ஹரியானாவின் ஜஜ்ஜாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சுமார் ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவரது மரணத்தை தொடர்ந்து அவரது மனைவி, ஜீவன் ஆரோக்கிய பாலிசியின் கீழ், மருத்துவ செலவுகளுக்கான இழப்பீடு கோரிக்கையை எல்ஐசியிடம் தாக்கல் செய்தார்.
ஆனால் அவரது கோரிக்கையை எல்ஐசி நிராகரித்தது. இறந்து போன நபர் தனக்கு இருந்த குடிப்பழக்கத்தை வெளிப்படுத்தத் தவறியதை காரணம் காட்டி கோரிக்கையை எல்ஐசி நிராகரித்தது. இதனையடுத்து இறந்து போன நபரின் மனைவி மாவட்ட நுகர்வோர் மன்றத்துக்கு இந்த வழக்கை எடுத்து சென்றார்.
வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் மன்றம் விதவை பெண்ணுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. விதவை பெண்ணுக்கு ரூ.5.21 லட்சம் இழப்பீடு வழங்க எல்ஐசிக்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மாநில மற்றும் தேசிய நுகர்வோர் ஆணையங்களிடம் எல்ஐசி மேல் முறையீடு செய்தது.
காலமான நபரின் மரணம் கல்லீரல் தொடர்பான நோயால் அல்ல, மாறாக மாரடைப்பால் எற்பட்டது என்று எல்ஐசி வாதம் செய்தது. ஆனால் மாநில மற்றும் தேசிய நுகர்வோர் ஆணையங்கள், மாவட்ட நுகர்வோர் மன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.
ஆனால் எல்ஐசி தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. இந்த வழக்கை உச்ச நீதி மன்றத்துக்கு கொண்டு சென்றது. நுகர்வோர் ஆணையங்களின் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. காலமான நபரின் மரணம் கல்லீரல் தொடர்பான நோயால் அல்ல, மாறாக மாரடைப்பால் எற்பட்டது என்று எல்ஐசி வாதம் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா, நுகர்வோர் மன்றங்களின் தீர்ப்புகளை ரத்து செய்தனர். நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், இது நிலையான காப்பீட்டு கொள்கை அல்ல, மாறாக கடுமையான விதிமுறைகளை கொண்ட ஒரு சிறப்பு மருத்துவ காப்பீட்டு திட்டம். இறந்தவர் நீண்ட கால குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலை ஒரே இரவில் உருவாகியிருக்க முடியாது.
பாலிசியை வாங்கும் நேரத்தில் இந்த உண்மையை அவர் வெளியிட தவறியது, கோரிக்கையை நிராகரிப்பதற்கு போதுமான காரணமாகும். மது அருந்துவது ஒரே இரவில் கல்லீரல் நோயை ஏற்படுத்தாது. இறந்தவர் பாலிசியை வாங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அவரது குடிப்பழக்கம் ஒரு பிரச்சினையாக இருந்திருக்கலாம் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
தவறான தகவல்களை அளித்ததன் அடிப்படையில், கோரிக்கையை நிராகரித்த எல்ஐசியின் முடிவு சரிதான் என்று தெரிவித்தனர். அதேசமயம், விதவையின் நிதி நிலைமையை கருத்தில் கொண்டு, அந்த பெண் எல்ஐசியிடமிருந்து ஏற்கனவே பெற்ற ரூ.3 லட்சத்தை திருப்பி கொடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிடவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு, காப்பீட்டு பாலிசியை வாங்கும்போது முழுமையாக வெளிப்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை நமக்கு வலியுறுத்துகிறது. மரணத்துக்கான காரணம் குடிப்பழக்கத்துடன் தொடர்புபில்லாதிருந்தாலும் கூட, மது அருந்துதல் பற்றிய விவரங்களை மறைப்பது எவ்வாறு உரிமைகோரல் நிராகரிப்புகளுக்கு வழிவகுக்கும் என்பதை இந்த வழக்கு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. எனவே எந்தவொரு பாலிசி வாங்கினாலும் நம்மை பற்றிய விவரங்களை எந்தவித ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்துவது நமக்கு நல்லது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications