அனைத்து டாக்ஸிகளிலும் Panic Button கட்டாயம்; மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

இந்தியாவில் அனைத்து பொது சேவை வாகனங்கள் மற்றும் டாக்சிகளிலும் இருப்பிடத்தை டிராக் செய்யக்கூடிய லொகேஷன் ட்ராக்கிங் டிவைஸ் (location tracking device) மற்றும் அவசர காலங்களில் ஆபத்துக்கு உதவி கோரும் பேனிக் பட்டன்கள் (panic button) பொறுத்தப்படுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனைத்து டாக்ஸி மற்றும் பொதுத்துறை வாகனங்களிலும் பானிக் பட்டன் மற்றும் லொகேஷன் ட்ராக்கிங் டிவைஸ்கள் பொருத்தப்பட்டு இருப்பது கட்டாயமாகியுள்ளது. ஒரு அவசர காலத்தில் வாகனத்தின் லொகேஷனை டிராக் செய்யவும், பயணிகள் எமர்ஜென்சி குறித்து உடனே ரிப்போர்ட் செய்யவும் லொகேஷன் மற்றும் பேனிக் பட்டன்கள் இருப்பது காலத்தின் தேவையாக உள்ளது. இந்த நிலையில் தான் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

அனைத்து டாக்ஸிகளிலும் Panic Button கட்டாயம்; மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

நீதிபதிகள் பரிதிவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு அளித்துள்ள உத்தரவில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாகனங்களில் தான் வாகனத்தின் இருப்பிடத்தை கண்டறிய உதவக்கூடிய லொகேஷன் ட்ராக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருப்பது என்பது அதிர்ச்சி தரும் செய்தியாக இருக்கிறது என கூறியது. எனவே அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கும் மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 125ஹெச் -ன் படி அனைத்து பொது சேவை வாகனங்கள் மற்றும் டாக்ஸிகளிலும் வெஹிகிள் லொகேஷன் ட்ராக்கிங் டிவைஸ்கள் மற்றும் பேனிக் பட்டன்கள் பொருத்தப்பட்டு இருப்பது கட்டாயம். இதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிடுகிறோம் என கூறியுள்ளனர்.

அனைத்து டாக்ஸிகளிலும் Panic Button கட்டாயம்; மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

பயணிகளின் பாதுகாப்பு குறிப்பாக பெண்கள் , குழந்தைகள் , மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இது கட்டாயம் என நீதிபதிகள் தங்களுடைய உத்தரவில் குறிப்பிட்டு இருக்கின்றனர். மேலும் லொகேஷன், எமர்ஜென்சி பேனிக் பட்டன்கள் பொருத்த முடியாத பொது சேவை வாகனங்களுக்கு ஆர்டிஓ அலுவலகத்தில் ஃபிட்னஸ் சான்றிதழ் மற்றும் டிரான்ஸ்போர்ட் உரிமம் கொடுக்கக் கூடாது என்றும் தங்களுடைய உத்தரவில் குறிப்பிட்டிருக்கின்றனர். வாகன் செயலியிலும் குறிப்பிட்ட எந்தெந்த வாகனங்களில் இந்த வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Also Read

வாகன உற்பத்தியாளர்கள் வாகனத்தை உற்பத்தி செய்யும்போதே இந்த இரண்டு கருவிகளையும் பொருத்தி வாகனங்களை விற்பனைக்கு அனுப்ப வேண்டும் என்ற யோசனையும் தெரிவித்து இருக்கின்றன. இது தொடர்பாக மத்திய அரசு அனைத்து வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பிடமும் ஆலோசனை நடத்தி ஒரு ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்திருக்கின்றனர்.

Recommended For You

அனைத்து வாகனங்களிலும் வேக கட்டுப்பாடு கருவிகள் கட்டாயம் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும் இதை தவறினால் கடுமையான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்ற எச்சரிக்கையும் நீதிபதிகள் முன் வைத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+