டெல்லி: அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்டின் துணை நிறுவனமான DAMEPL நிறுவனம் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் இருந்து பெற்ற ரூ. 3,300 கோடியை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஆனால், அனில் அம்பானியின் நிறுவனங்கள் ஏற்கனவே கடுமையான கடனில் மூழ்கி உள்ளதால் இந்த தொகையை அந்த நிறுவனம் செலுத்த இயலுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த தீர்ப்பு மூலம் அம்பானியின் டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட்(DAMEPL) க்கு ஆதரவாக வழங்கப்பட்ட ரூ. 8,000 கோடி தீர்ப்பை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்தது.

2008 இல் DAMEPL (அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சரின் துணை நிறுவனம்) மற்றும் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் ஆகியவற்றுக்கு இடையே நிதி பரிவர்த்தனை மோதல் காரணமாக தொடுக்கப்பட்ட வழக்கு ஆகும். இது, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அனில் அம்பானியின் டெல்லி ஏர்போர்ட் மெட்ரோ எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட் டெல்லி மெட்ரோவிற்கு எதிராக பணம் கேட்டு வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கில் டெல்லி மெட்ரோ எங்களுக்கு 8000 கோடி ரூபாய் தர வேண்டும். மெட்ரோ கட்டுவது தொடர்பாக நாங்கள் மேற்கொண்ட பணிகள் தொடர்பாக இந்த தொகையை வழங்க வேண்டும் என்று DAMEPL நிறுவனம் வழக்கு தொடுத்தது. இதில் டெல்லி உயர்நீதிமன்றம் DAMEPL நிறுவனத்திற்கு டெல்லி மெட்ரோ 8000 கோடி ரூபாய் வழங்க உத்தர விட்டது.
இதையடுத்து கிட்டத்தட்ட 3000 கோடி ரூபாய் வரை அணில் அம்பானி நிறுவனத்திற்கு டெல்லி மெட்ரோ கொடுத்தது. அதனான் டெல்லி மெட்ரோ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதில்தான் உயர்நீதிமன்ற தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு மெட்ரோவிற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்டின் துணை நிறுவனமான DAMEPL நிறுவனம் டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் இருந்து பெற்ற ரூ. 3,300 கோடியை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
8000 கோடி கொடுக்க வேண்டியது இல்லை.. நீங்கள் கொடுத்த பணத்தை அணில் அம்பானியிடம் இருந்து திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. ஆனால், அனில் அம்பானியின் நிறுவனங்கள் ஏற்கனவே கடுமையான கடனில் மூழ்கி உள்ளதால் இந்த தொகையை அந்த நிறுவனம் செலுத்த இயலுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
DMRC, ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனத்திற்கு ரூ.3,300 கோடியை செலுத்தியுள்ளது, அது இப்போது திருப்பித் தரப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அணிலுக்கு அடிமேல் அடி: 1986 இல் திருபாய் அம்பானி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பிறகு, அனில் அம்பானி தனது தந்தையின் மேற்பார்வையின் கீழ் ரிலையன்ஸின் தினசரி நிர்வாகத்தை எடுத்துக் கொண்டார். அவரும் அவரது மூத்த சகோதரர் முகேஷும் 2002 இல் தங்கள் தந்தையின் மரணத்திற்குப் பிறகு ரிலையன்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தலைமைப் பொறுப்பை ஏற்றனர்.
ஆனால் விரைவில் அவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். முகேஷ் முதன்மையான எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல்களின் நிறுவனங்களைப் பெற்றார், அதே நேரத்தில் அனில் தொலைத்தொடர்பு, மின் உற்பத்தி மற்றும் நிதிச் சேவைகள் போன்ற புதிய வணிகங்களின் கட்டுப்பாட்டை 2005 ஆம் ஆண்டு முதல் எடுத்து கொண்டார்.
ஆனால் தந்தையின் அனைத்து சொத்துகளையும் பிரித்து கொண்ட பிறகும், சகோதரர்கள் இருவரும் சண்டையிடுவதை நிறுத்தவில்லை. முகேஷின் நிறுவனத்தால் இயக்கப்படும் வயல்களில் இருந்து அனில் குழுமத்தின் மின் உற்பத்தி நிலையத்திற்கு எரிவாயு வழங்குவது தொடர்பாக அவர்கள் சண்டையிட்டனர்.
அனில் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் பொழுதுபோக்கு வணிகங்களை விரிவுபடுத்துவதற்காக கடன் வாங்கினார்.
2005 இல் Adlabs மற்றும் 2008 இல் DreamWorks உடன் $1.2 பில்லியன் ஒப்பந்தத்துடன் பொழுதுபோக்கு வணிகத்தில் அவர் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை. 2014 இல், அவரது எரி சக்தி மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனங்கள் பெரும் கடனில் மூழ்கின.
இதனால் அனில் தனது சில நிறுவனங்களை விற்றார். பிக் சினிமா, ரிலையன்ஸ் பிக் பிராட்காஸ்டிங் மற்றும் பிக் மேஜிக் போன்ற நிறுவனங்கள் இதில் அடங்கும்.
2019 ஆம் ஆண்டில், எரிக்சன் ஏபியின் இந்திய யூனிட்டிற்கு ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்காம்) ரூ. 550 கோடி செலுத்தத் தவறியதால், அனில் அம்பானிக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறி இருந்தது.
இந்த தொகையை திரட்ட நீதிமன்றம் அவருக்கு ஒரு மாத அவகாசம் அளித்தது மற்றும் முகேஷ் அம்பானி கடைசி நேரத்தில் தேவையான பணத்தைக் கொடுத்து ஜாமீன் பெற்றார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications