Surat வைர வியாபாரிகள் சோகம்..ஒரே மாதத்தில் 20000 பேர் வேலை மாயம்..!

இந்தியாவில் ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதில் சூரத் வைர வியாபாரிகளை அடித்துக்கொள்ள ஆள் யாரும் இல்லை, தீபாவளி, தசரா பண்டிகைகள் போது ஊழியர்களுக்கு கார், வீடு, பைக், தங்கம் என வாரி வழங்கும் வழக்கத்தைக் கொண்டு உள்ளது.

உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யப்படும் கட் மற்றும் பாலிஷ் வைரங்களில் சுமார் 80 சதவீதம் சூரத் நகரில் இருக்கும் வைர தொழிற்சாலைகளில் இருந்து தான் வெளியேறுகிறது.

இதனால் வர்த்தகத்திலும், லாபத்திலும் குறைவு இல்லாமல் பிரம்மாண்டமாக வளர்ச்சி அடைந்து வந்த நிலையில் தற்போது வர்த்தகத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றத்தின் காரணமாக ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்துள்ளது.

சூரத் வைர தொழிற்சாலை

சூரத் வைர தொழிற்சாலை

உலகம் முழுவதிலும் வைரங்களுக்கான டிமாண்ட் சிறப்பாக இருந்த நிலையில் சூரத் வைர பாலிஷ் தொழிற்சாலைகள் கொடிகட்டிப் பறந்தது. ஆனால் ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய பின்பு மேற்கத்திய நாடுகள் மற்றும் சீனாவில் வைரங்களுக்கான டிமாண்ட பெரிய அளவில் குறைந்துள்ளது.

20000 ஊழியர்கள் பணிநீக்கம்

20000 ஊழியர்கள் பணிநீக்கம்

இதன் எதிரொலியாகச் சூரத் வைர பாலிஷ் தொழிற்சாலைகள் சுமார் 20000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இந்திய வைர வர்த்தகம் மற்றும் ஏற்றுமதிக்குச் சூரத் தான் தலைமையான இடமாக இருக்கும் வேளையில் இந்தப் பணிநீக்கம் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

4000 தொழிற்சாலைகள்

4000 தொழிற்சாலைகள்

சூரத் பகுதிகளில் மட்டும் சுமார் 4000 வைர கட் மற்றும் பாலிஷ் யூனிட்கள் உள்ளது, இதில் சுமார் 80000 பேர் பணியாற்றி வருகின்றனர். தற்போது வர்த்தகம் மற்றும் டிமாண்ட் குறைந்துள்ளதால் அனைத்து தொழிற்சாலைகளும் 60-70 சதவீத ஊழியர்களை மட்டுமே வைத்து இயக்கி வருகிறது. இதன் வாயிலாகக் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 20000 வைர ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

ஏற்றுமதி சரிவு

ஏற்றுமதி சரிவு

உலகளவில் வைரங்களுக்கு அதிகப்படியான வர்த்தகச் சந்தையைக் கொண்டு உள்ளது அமெரிக்கா தான், இதைத் தொடர்ந்து சீனா. இந்த நிலையில் நவம்பர் மாதத்தின் கட் மற்றும் பாலிஷ் செய்யப்பட்ட வைரங்களின் ஏற்றுமதி 5.43 சதவீதம் சரிந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை

தங்கம் மற்றும் வெள்ளி விலை

தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு போலவே வைரங்களின் விலையும் சமீப காலமாகப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதனால் வைரங்களை வாங்குவோர் எண்ணிக்கை பெரிய அளவில் சரிந்துள்ளது.

ரஷ்ய சுரங்கம்

ரஷ்ய சுரங்கம்

இதேவேளையில் சர்வதேச சந்தையில் பெருமளவிலான வைரங்கள் ரஷ்ய சுரங்கத்தில் இருந்து வரும் நிலையில், பல நாடுகள் ரஷ்ய வைரத்தை வாங்க மறுப்புத் தெரிவித்தது. இதனால் வைரத்தை origin-ஐ கண்டறியும் புதிய தேவையும் சர்வதேச சந்தையில் உருவானது. இந்த நிலை அமெரிக்கா மற்றும் அனைத்து G7 நாடுகளிலும் உள்ளது.

ரெசிஷன்

ரெசிஷன்

மேலும் அமெரிக்கா, ஐரோப்பா, சீனாவில் ரெசிஷன் வரும் அச்சம் அதிகமாக இருக்கும் காரணத்தால் வைரம் போன்ற ஆடம்பர பொருட்களுக்கான சந்தை பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

சீனா

சீனா

சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதால் ஒட்டுமொத்த வர்த்தகமும் சரிந்துள்ளது, ஆனால் கடந்த சில மாதத்தில் லாக்டவுன் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பு சீன மக்களும், அரசும் தங்கத்தை அதிகளவில் வாங்கியதால் தங்கம் விலை அதிகரித்துள்ளது.

லாபம் குறைந்தது

லாபம் குறைந்தது

மேலும் rough diamond விலை தாறுமாறாக அதிகரித்து வரும் நிலையில், பாலிஷ் செய்யப்பட்ட வைரத்திற்கு டிமாண்ட் குறைந்துள்ளது. இதனால் சூரத்தில் இருக்கும் வைர கட் மற்றும் பாலிஷ் செய்யப்படும் தொழிற்சாலைகளின் லாபம் குறைந்து இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+