சீனா மற்றும் அமெரிக்கா போன்ற முக்கிய சந்தைகளுக்கு ஏற்றுமதி குறைந்ததால், சரக்குகளின் அளவைக் குறைக்க விரும்பும் வைர நிறுவனங்கள் ஆகஸ்ட் 18 முதல் 10 நாட்களுக்கு வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன. கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு சீனா தங்கத்தை மட்டுமே வாங்கி வருகிறது. மேலும் அமெரிக்காவில் வைர நுகர்வு குறைந்துள்ள காரணத்தினால் வைர உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையை சரி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குஜராத் முழுவதும் சுமார் 500 சிறிய வைர கட்டிங் மற்றும் பாலிஷ் யூனிட்கள் தங்களது செயல்பாட்டை நிறுத்தவுள்ளன. இதனால் 70,000-75,000 தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள் என்று தொழிலாளர் சங்க ஆதாரங்களை மேற்கோள் காட்டி எக்கனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

வேலை நிறுத்தம் செய்ய இருக்கும் இந்த வைர நிறுவனங்கள் முன்னர் சூரத் மற்றும் மும்பையில் உள்ள முக்கிய ஏற்றுமதியாளர்களுக்கு தங்கள் தயாரிப்புகளை வழங்கியுள்ளன.
பொதுவாக, குஜராத்தின் வைர உற்பத்தி தொழிற்சாலைகள் தீபாவளி நேரத்தில் நீண்ட விடுமுறையை எடுக்கும். ஆனால், ஆண்டு தொடக்கத்திலேயே வேலை நிறுத்தத்தை குறைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் காரணமாக வைர விலை உயர்ந்து, மொத்த தொழிலுக்கும் பயனளிக்கும் என்று தொழில் வட்டாரங்கள் நம்புகின்றன. தற்போது வைரத்திற்கான தேவை உலகளவில் குறைந்துள்ள காரணத்தினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பாலிஷ்ட் வைரங்களில் 95% ஏற்றுமதி செய்யப்படுவதால், உலகளாவிய வைர சந்தையில் விற்பனை சர்வதேச காரணிகளைப் பொறுத்து மாறுபடும். ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனை ஆகியவை வைர விற்பனையை பாதிக்கும் முக்கிய பிரச்சனைகளாக உள்ளன.
சூரத் டைமண்ட் அசோசியேஷன் தலைவர் ஜகதீஷ் குன்ட், ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனை போன்ற காரணங்கள் உலகளாவிய வைர தேவை மற்றும் ஒட்டுமொத்த நகைத் துறையையும் கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவித்தார்.
2022-ஆம் ஆண்டில், வைரத் தொழிலின் டர்ன்ஓவர் கிட்டத்தட்ட ரூ. 2,25,000 கோடியாக இருந்ததாகவும் ஆனால் இப்போது சுமார் ரூ. 1,50,000 கோடியாகக் குறைந்துள்ளதாகவும், கடந்த 2 ஆண்டுகளாக வைர விற்பனையில் சரிவைச் சந்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா விதித்த தடைகள் மற்றும் ஜி7 நாடுகள் ரஷ்ய வைரங்களுக்கு தடை விதித்ததும் வைரத் தேவை குறைந்திருப்பதற்கான காரணங்களாக உள்ளன. உலகளாவிய வைரச் சுரங்க நிறுவனமான "டி பீர்ஸ்" ஜூன் மாதத்துடன் முடிவடையும் 2-வது காலாண்டில் தோராயமான வைர உற்பத்தியை 15% குறைப்பதாக அறிவித்தது.
இந்த நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில், சூரத் வைரத் தொழிலாளர் சங்கம் சமீபத்தில் வேலை இழப்பு அல்லது நிதி சிரமங்களை சந்திப்பவர்களுக்காக உதவிக்குழு ஒன்றைத் தொடங்கியது. தொடங்கப்பட்டதிலிருந்து, வேலை இழப்பு அல்லது சம்பளக் குறைப்புடன் போராடும் நபர்களிடமிருந்து 1,600 அவசர அழைப்புகள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications