புகழ்பெற்ற தொழிலதிபரான ரத்தன் டாட்டா தனது 86 வயதில், வயது மூப்பின் காரணமாக மும்பை மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவு நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கடந்த திங்கட்கிழமை அன்று ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த ரத்தம் டாட்டா புதன்கிழமை அன்று இரவு 11:30 மணியளவில் உயிரிழந்தார். இந்தியாவின் தொழில் துறையில் அவருடைய மகத்தான பங்களிப்புக்காக அறியப்பட்ட டாட்டாவின் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்றெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு டாட்டா பிராண்ட் பொருட்களாவது இருக்கும். டாட்டா உப்பு முதல் டாடா மோட்டார்ஸ் வரை டாடா பிராண்ட் உலக நாடுகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்னதான் தொழிலதிபராக இருந்தாலும் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து டாட்டா குழுமத்தின் பல்வேறு துறைகளிலும் எக்ஸ்பீரியன்ஸ்சை பெற்று படிப்படியாக வளர்ந்து வந்தவர் ரத்தன் டாட்டா.
நாட்டு மக்கள் பலரும் ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் சூரத்தை சேர்ந்த ஒருவர் வினோதமாக அஞ்சலி செலுத்தி விடியோவாக பதிவிட்டுள்ளார். இதன் மூலம் பலரின் இதயங்களையும் கவர்ந்துள்ளார். ரத்தன் டாடவின் உருவத்தை 11,000 வைரங்களை பயன்படுத்தி அவருடைய புகைப்படத்தை உருவாக்கியுள்ளார். சமூக முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு மனிதருக்கு பொருத்தமான மரியாதையாக இது உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வெளியான அந்த வீடியோவில் ஒரு நபர் சேரில் அமர்ந்து கொண்டு ரத்தன் டாடாவின் உருவத்திற்கு ஏற்ப சிறிய வைரக் கற்களை ஒன்றன்பின் ஒன்றாக ஒட்டி வைக்கிறார். அந்த வைரக் கற்கள் பார்ப்பதற்கே மிகவும் சிறிய அளவில் உள்ளது. இதை நுணுக்கமாக அடுக்கி ரத்தம் டாட்டாவின் உருவத்தை உருவாக்கியுள்ளார்.
இன்ஸ்டன்ட் பாலிவுட் இன்ஸ்டாகிராம் கணக்கால் பகிரப்பட்ட இந்த திகைப்பூட்டும் வீடியோ 5 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது. இது மக்களின் வாழ்க்கையில் ரத்தன் டாடா ஏற்படுத்திய ஆழமான தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.
வெளியான வீடியோவுக்கு பலரும் தங்களுடைய கமெண்ட்ஸ் மூலம் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். ஒரு பயனர் ரத்தன் டாட்டா ஒரு தொழிலதிபர் மட்டும் கிடையாது அவர் ஒரு நம்பிக்கையின் நட்சத்திரம் என்று பதிவிட்டிருந்தார். மற்றொரு நபர் இந்த அஞ்சலி உண்மையிலேயே ஒரு கலை படைப்பு என்று கருத்து தெரிவித்திருந்தார். மற்றொரு பயனர் தனது பணிவு மற்றும் தொலைநோக்குப் பார்வைக்காக பெரிதும் அறியப்பட்டவர். இவர் இல்லாமல் இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது என்று பதிவிட்டிருந்தார்
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications