குஜராத்தில் ரூ.1,455 கோடி சைபர் மோசடி.. 89 வங்கிக் கணக்குகள் மூலம் உலகளாவில் நடக்கும் கிரைம்.!!

சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் இருக்கிறது. ஒரு புறம் உலகம் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில், மறுபுறம் சைபர் மோசடிகள் பெருமளவில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், உலகளவில் பெரும் மோசடிகளை நிகழ்த்தி வந்த 3 நபர்களை குஜராத் காவல்துறையினர் பிடித்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு பயங்கரமான மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குஜராத் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்படி, சர்வதேச சைபர் குற்றவாளிகள், வெறும் ஆறு மாதங்களில் 89 இந்திய வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.1,455 கோடிக்கும் அதிகமான பணத்தை மாற்றி, மிகப்பெரிய மோசடியை அரங்கேற்றியுள்ளனர். இந்த வங்கி கணக்குகள், சூரத்தைச் சேர்ந்த மூன்று நபர்களால், ஒரு கமிஷன் அடிப்படையில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டதாக காவல் ஆய்வாளர் எஸ்.என். தேசாய் தெரிவித்தார்.

குஜராத்தில் ரூ.1,455 கோடி சைபர் மோசடி.. 89 வங்கிக் கணக்குகள் மூலம் உலகளாவில் நடக்கும் கிரைம்.!!

மோசடி எப்படி அம்பலமானது?: மே 28 அன்று கிராத் ஜத்வானி, மீட் கோகர் மற்றும் மயூர் இத்தாலியா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்துதான் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது. சூரத்தின் உத்னா பகுதியில் நடைபெற்ற வழக்கமான வாகனச் சோதனையின்போது, இவர்களுள் ஒரு கூட்டாளி போலி பான் கார்டுகள் மற்றும் ரப்பர் முத்திரைகளுடன் பிடிபட்டார். இதைத் தொடர்ந்து, இவர்களிடம் இருந்து 21 டெபிட் கார்டுகள், 30 காசோலை புத்தகங்கள் மற்றும் வெவ்வேறு பெயர்களில் வழங்கப்பட்ட ஆறு பான் கார்டுகள் ஆகியவை காவல்துறையால் கைப்பற்றப்பட்டு, மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

அப்போது, தனிநபர் கடனுக்கு விண்ணப்பித்தவர்களின் ஆவணங்களைப் பயன்படுத்தி இந்த மூவரும் 165 வங்கிக் கணக்குகளைத் திறந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், டிஜிட்டல் கைது மோசடி (digital arrest), ஹவாலா பரிமாற்றம், பணி மோசடி (job fraud), பந்தயம் கட்டுதல், பங்குச் சந்தை மோசடி, ஆன்லைன் ஏமாற்றுதல் மற்றும் OTP மோசடி உள்ளிட்ட பல்வேறு சைபர் குற்றங்களுக்கான அணுகலை அவர்கள் வெளிநாட்டுக் குற்றவாளிகளுக்கு வழங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் கியூபா, தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளைத் தளமாகக் கொண்ட சைபர் கும்பல்களுடன் டெலிகிராம் செயலி மூலம் தொடர்பு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இவர்களுக்கு வங்கிக் கணக்குகளை வழங்குவதற்கு ஈடாக, அவர்களுக்கு நல்ல கமிஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த 165 கணக்குகளில் 89 கணக்குகளின் விவரங்களை இதுவரை வங்கிகளிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து அடையாளம் காணப்பட்ட அனைத்துக் கணக்குகளும் உடனடியாக முடக்கப்பட்டுள்ளன.

தந்திரமான வங்கிக் கணக்குத் திறப்பு முறை: இந்த மோசடிக்காரர்கள் வங்கிக் கணக்குகளைத் திறக்க ஒரு புத்திசாலித்தனமான தந்திரத்தைப் பயன்படுத்தியுள்ளனர். தனிநபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் நபர்களை அணுகி, அவர்களின் ஆவணங்களைப் பெற்றுக்கொண்டு, நிதி பாதுகாப்பிற்கு உதவுவதாகக் கூறியுள்ளனர். அந்த ஆவணங்களைப் பயன்படுத்தி ஒரு வங்கிக் கணக்கைத் திறந்த பிறகு, கடன் நிராகரிக்கப்பட்டுவிட்டதாகக் கூறி, விண்ணப்பதாரரிடம் ஆவணங்களைத் திருப்பித் தந்துள்ளனர்.அவர்கள் OTP பெறுவதற்குத் தங்கள் சொந்த மொபைல் எண்ணைக் கொடுத்ததால், விண்ணப்பதாரர் தங்கள் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு திறக்கப்பட்டது குறித்து தெரியாமல் இருந்துள்ளனர்.

கமிஷன் அடிப்படையில் கோடிக்கணக்கான மோசடி: ஆரம்பத்தில், இந்தக் கும்பல் ஒவ்வொரு கணக்கையும் ரூ.7 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை ஒருமுறை கட்டணமாக குத்தகைக்கு விடும். அவர்களின் செயல்பாடுகள் வளர்ந்தவுடன், கணக்குகள் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் 3% முதல் 4% வரை கமிஷன் வசூலிக்கத் தொடங்கினர். வெறும் ஆறு மாதங்களில், இந்தக் கணக்குகள் ஒவ்வொன்றிலும் பரிவர்த்தனைகள் நாள் முழுவதும் தொடர்ந்ததால், குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் கமிஷன் மூலம் ரூ.10 கோடி சம்பாதித்துள்ளனர். மொத்தத் தொகை ஒவ்வொரு கணக்கிலும் ரூ.30 முதல் ரு.40 கோடியாக உயரும் என்றும் கூறப்படுகிறது

இந்தக் கணக்குகளுடன் இணைக்கப்பட்ட கிட்டத்தட்ட 2,500 புகார்களை தேசிய சைபர் குற்ற அறிக்கையிடல் போர்ட்டல் ஏற்கனவே பெற்றுள்ளது. இதில் கடந்த ஆறு மாதங்களில் குஜராத்தில் இருந்து மட்டும் 265 புகார்கள் அடங்கும். இது சைபர் குற்றங்களின் பெரும் பரவலையும், அவற்றின் நிதித் தாக்கத்தையும் உணர்த்துகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+