இந்திய கிரிக்கெட் அணியிலும், சென்னை ஐபிஎல் அணியிலும் சின்ன தல என செல்லமாக அழைக்கப்படும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தற்போது அனைத்து விதமான கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்று சில ஆண்டுகள் ஆனது.
இந்த நிலையில் நெதர்லாந்தில் சுரேஷ் ரெய்னா தனது சொந்த பெயரில் ஒரு இந்திய உணவகத்தை திறந்து ஒட்டுமொத்த செலிப்ரிட்டி உலகை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். சினிமா துறையினர் முதல் விளையாட்டு துறை வீரர்கள் வரையில் விடுமுறைக்காக செல்லும் முக்கியமான இடம் நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்டர்டாம்.

ரெஸ்டாரென்ட் திறந்தால் இங்க தான் திறக்க வேண்டும் என
ஆம்ஸ்டர்டாம்-ஐ பல மாத ஆய்வுக்கு பின்பு சேர்வு செய்தார் சுரேஷ் ரெய்னா. ஆம்ஸ்டர்டாம் நகரில் ரெய்னா - கலினரி ட்ரெஷர்ஸ் ஆஃப் இந்தியா என்ற பெயரில் இந்த ரெஸ்டாரென்ட் துவங்கப்பட்டு உள்ளது என்று வெள்ளிக்கிழமை அறிவித்ததார்.
36 வயதான முன்னாள் சிஎஸ்கே அணி வீரர் தனது புதிய வர்த்தகம் பற்றி தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். ரெய்னா தனது இன்ஸ்டா பதிவில் எப்போதும் இல்லாத வகையில் சமையல் கலையை ரசிக்கவும், ருசிக்கவும் தயாராகுங்கள்! ஆம்ஸ்டர்டாமில் ரெய்னா - இந்திய உணவகத்தை அறிமுகப்படுத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று கிரிக்கெட் வீரர் இன்ஸ்டாகிராம் பதிவில் எழுதினார்.
இந்த பதிவு மட்டும் அல்லாமல் ஆம்ஸ்டர்டாம் நகரில் ரெய்னா - கலினரி ட்ரெஷர்ஸ் ஆஃப் இந்தியா என்ற பெயரில் துவங்கப்பட்டு உள்ள புதிய ரெஸ்டாரென்ட் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த ரெஸ்டாரென்ட்-ல் வட இந்திய மற்றும் தென்னிந்திய உணவுகள் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ரெய்னாவின் ரெஸ்டாரென்ட்-ல் உணவின் விலை 1.49 யூரோ அதாவது 132 ரூபாயில் இருந்து அதிகப்படியாக 24.5 யூரோ வரையில் அதாவது 2183 ரூபாய் வரையில் வருகிறது. 5 நட்சத்திர ஹோட்டல் ஆக இல்லாவிட்டாலும் பிரியமியம் உணவாகு இருக்கும்.
இந்திய கிரிக்கெட் அணியின் சாம்ராட் ஆக இருக்கும் விராட் கோலி One8 என்ற ரெஸ்டாரென்ட்-ஐ 5 ஸ்டார் தரத்தில் இயக்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications