தேங்காய் பூ விலை ஏற்றம்.. அப்படி என்ன மவுசு இதுல? இது ஏன் இவ்வளவு விலை விக்கிது?

விழுப்புரம்: தமிழகத்தில் தேங்காய் பூ விற்பனை விழுப்புரம் மாவட்டத்தில் அதிகம் செய்யப்படுகிறது. கோடை காலங்களில் இந்த கோக்கனட் ஆப்பிள் என்று சொல்லப்படுகிற தேங்காய் பூவிற்கு தேவை அதிகம் இருப்பதால் அதன் விலை சற்று ஏறி உள்ளது.

இந்த தேங்காய் பூ, விழுப்புரத்தில் உள்ள பஸ் நிலையம் மற்றும் ரங்கநாதன் தெரு ஆகிய இடங்களில் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. கோடை வெப்பத்தினால் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தவிர்க்க இந்த தேங்காய் பூ மக்களுக்கு பெரிதும் உதவுகிறது. தேங்காய் பூ மட்டுமின்றி, தென்னை மரத்தில் உள்ள மற்ற பாங்களும் உடலுக்கு நன்மை தரக்கூடியவைகளாக உள்ளன. கோடைகால உஷ்ணத்தை தவிர்க்க பலர் இளநீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். எனினும் பலருக்கு அதன் மகத்துவம் பற்றி தெரிவதில்லை. முன்பு கேரளாவில் மட்டுமே விற்கப்பட்ட இந்த தேங்காய் பூக்கள் தற்போது சென்னை, பொள்ளாச்சி, திருச்சிராப்பள்ளி, சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தேங்காய் பூ விலை ஏற்றம்.. அப்படி என்ன மவுசு இதுல? இது ஏன் இவ்வளவு விலை விக்கிது?

தேங்காய் பூ சிறியதாக இருக்கும் பட்சத்தில் ரூ. 50 மற்றும் கொஞ்சம் பெரிய அளவில் இருக்கும் பூக்கள் ரூ. 80 மற்றும் ரூ. 100 என்ற விலையில் விற்கப்படுகிறது. கோடை காலம் என்பதால் மக்கள் அதிகம் தேங்காய் பூக்களை வாங்கி சாப்பிட ஆர்வம் காட்டி வருகின்றனர். தேங்காய் பூவில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. இவை பருவ கால நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பை அளிக்க உதவும். தைராய்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருபவர்கள் இந்த தேங்காய் பூக்களை வாங்கி சாப்பிட்டால், அதிகமாக இருக்கும் தைராய்டு சுரப்பிகள் குறைந்து குணமாக வாய்ப்பு உள்ளது. மேலும் கொழுப்பை குறைக்க இந்த தேங்காய் பூக்கள் உதவுகின்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் இல்லாமல் மற்ற மாவட்டங்களான கம்பம், தேனி ஆகிய பகுதிகளிலும் இந்த கோடைகால தேர்வாக தேங்காய் பூக்கள் அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது, இது தேங்காய் பாலை போன்ற சுவை கொண்டது, எனவே, அதன் சுற்றுப்புற கிராமங்களான சின்னமனூர், கூடலூர் போன்ற பகுதிகளிலும் இந்த தேங்காய் பூக்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த தேங்காய் பூக்களை அதிகம் சாப்பிடுவதால் வாய்ப்புண், வாயு பிரச்சனை, கல்லீரல் பிரச்சனை போன்ற உடல்நல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என தேங்காய் பூ விற்கும் கடைக்காரர்கள் தெரிவிக்கின்றனர், மேலும் தேங்காய் பூ கோடைகாலத்தில் ஏற்படும் உடல் சூட்டை குறைக்க உதவுகிறது. சிறுநீரக கற்கள், சளி, நுரையீரல் பிரச்சனை போன்ற பிரச்சனைகளில் பாதிக்கப்பட்டு இருப்பவர்களும் இந்த தேங்காய் பூவை சாப்பிடலாம் என கூறப்படுகிறது.

இது உடலின் மெட்டபாலிசத்தை தூண்ட உதவுகிறது. இதில் குறைந்த அளவில் மட்டுமே கலோரி உள்ளதால், உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது. ஜீரண சக்தி இல்லாமல் இருக்கும் நபர்களுக்கு தேங்காய் பூ நல்ல நன்மைகளை வழங்குகிறது. இதனால் அஜீரணம் ஏற்படாமல் இருக்கும். மேலும் மலச்சிக்கலை விரட்ட உதவுகிறது. தேங்காய் பூ மட்டுமின்றி தேங்காய் பாலிலும் பல்வேறு நன்மைகள் உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+