அரசாங்க ஆவணங்களில் முக்கியமான ஆவணம் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு. இரண்டையுமே பத்திரமாக வைத்திருப்பது அவசியம். அது மட்டும் இன்றி ஒருவர் ஒரே ஒரு பான் கார்டை மட்டும் தான் வைத்திருக்க வேண்டும். ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருக்கக் கூடாது. அப்படி வைத்திருந்தால் அது சட்டப்படி குற்றமாகும். இதனை பின்பற்றாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. எனவே இந்தப் பதிவில் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருக்கும் நபர்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை விரிவாக பார்ப்போம்.
பான் கார்டுகளில் பிழை இருந்தால் மாற்றிக் கொள்ளலாம். அதேபோல பான் கார்டு காணாமல் போனால் மீண்டும் இன்னொரு டூப்ளிகேட் பான் கார்டை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் ஒருபோதும் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருக்கக் கூடாது.

வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் விதமாக, இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. வங்கி கணக்கோடு தொடர்புடையதாக பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இருப்பதால் ஒருவர் ஏதேனும் மோசடி செயல்களில் ஈடுபட்டால் எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.
மேலும் நீங்கள் 2 பான் கார்டுகளோடு பிடிபட்டால் வருமானவரித்துறை உங்கள் மீது நடவடிக்கை எடுக்கும். வருமான வரித்துறையின் விதிகளின்படி ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் அனைவரிடமும் மோசடி செய்வதற்காக மட்டுமே 2 பான் கார்டுகள் இருக்கும் என்று கூறிவிட முடியாது.
ஏனெனில் ஒருவர் பான் கார்டு பெற விண்ணப்பித்திருக்கும்போது அது வருவதற்கு காலதாமதம் ஏற்பட்ட காரணங்களினால் மீண்டும் அவர் பான் கார்டு பெற விண்ணப்பித்திருக்கலாம். இன்னும் சிலர் அறியாமையின் காரணமாக பான் கார்டு விண்ணப்பித்த பிறகு அதில் ஏதேனும் பிழை இருந்தால், அதனை அப்டேட் செய்வதற்கு பதிலாக மீண்டும் விண்ணப்பித்து இன்னொரு பான் கார்டை பெற்றுவிடுவார்கள்.
அதே போல திருமணத்திற்குப் பிறகு கணவருடைய பெயரை தங்கள் பெயரோடு இணைத்துக் கொள்ளும் பெண்கள், பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவற்றில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதன் போது சிலர் தெரியாமல் புதிய பான் கார்டு பெறுவதற்கு விண்ணப்பித்து விடுகின்றனர். இதுபோன்ற பெண்களிடமும் 2 பான் கார்டுகள் இருக்கும்.
மோசடி காரணங்கள்: மேலே கூறிய பட்டியலில் இல்லாதவர்கள் மோசடிக்காகவும் 2 பான் கார்டுகளை சட்டவிரோதமாக பயன்படுத்துகின்றனர். இது போன்ற காரணங்களால் உங்களிடம் 2 பான் கார்டுகள் இருந்தால், ஒன்றை ஒப்படைப்பது எப்படி? என்பதை பார்ப்போம்.
பான் கார்டை ஒப்படைப்பதற்கான ஆஃப்லைன் செயல்முறை:
ஸ்டேப் 1: "Request For New PAN Card Or/And Changes Or Correction in PAN Data" படிவத்தைப் பெற்று, பூர்த்தி செய்யவும்.
ஸ்டேப் 2: பூர்த்தி செய்யப்பட்ட படிவம் மற்றும் தேவையான ஆவணங்களுடன் அருகிலுள்ள NSDL மையத்தைப் பார்வையிடவும்.
ஸ்டேப் 3: படிவத்தை சமர்ப்பித்தவுடன் அக்னாலேஜ்மென்ட் ஸ்லிப்பை பெறுங்கள்.
ஸ்டேப் 4: அக்னாலேஜ்மென்ட் ஸ்லிப்பை, 15 நாட்களுக்குள் NSDLக்கு அனுப்பவும்.
ஸ்டேப் 5: டூப்ளிகேட் பான் கார்டை, ரத்து செய்யக் கோரும் கடிதத்தை உங்கள் மதிப்பீட்டு அதிகாரிக்கு எழுதுங்கள். மேலும், உங்கள் உள்ளூர் வருமான வரி மதிப்பீட்டு அதிகாரியைப் பார்வையிடவும். PAN தொடர்பான கடிதத்தை சமர்ப்பித்து, ரத்துசெய்யக் கோரவும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications