இந்தியாவில் மதுபானங்களுக்கு நேரடி விளம்பரங்கள் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மறைமுகமாக மதுபானங்களை ஊக்குவிக்கும் விளம்பரங்களையும் அதிரடியாகத் தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனால் கார்ல்ஸ்பெர்க், பெர்நாடு ரைகார்டு, டியாகோ போன்ற நிறுவனங்கள் தங்களது விளம்பரங்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தண்ணீர், மியூசிக் சிடி, கிளாஸ்வேர் போன்றவற்றில் மதுபான நிறுவனங்களின் லோகோக்களை இடம்பெறச் செய்து மறைமுகமாக விளம்பரங்களை தயாரித்து ஒளிபரப்பி விடுகின்றனர். இதுபோன்ற மறைமுக விளம்பரங்களைக்குத் தடையில்லை. இத்தகைய மறைமுக விளம்பரங்களுக்கு பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் கூட நடித்துக் கொடுக்கின்றனர்.

ஆனால் இதற்கு கடிவாளம் போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி புகையிலை, மதுபான மறைமுக விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதுபோன்று மறைமுக விளம்பரங்களில் நடிக்கும் நட்சத்திரங்களை தண்டித்தால்தான் அவர்கள் இனி நடிக்க மாட்டார்கள் என்று அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மறைமுகமாக இந்த தயாரிப்புகளை விளம்பரப்படுத்தக் கூடாது என்றும் அவர் கூறினார். இது தொடர்பான இறுதி விதிகள் இன்னும் ஒரு மாதத்துக்குள் இறுதி செய்யப்பட்டு அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. ஒரு விளம்பரம் மதுபானம் அல்லது புகையிலையை மறைமுகமாக அல்லது வேறுவிதமாக ஆதரித்து ஊக்குவிப்பதாக கண்டுபிடிக்கப்பட்டால் அதில் நடித்த நடிகர்களே இதற்கு பொறுப்பு ஆவார்கள்.
எடுத்துக்காட்டாக, மதுபானம் தயாரிக்கும் கார்ல்ஸ்பெர்க் நிறுவனம் இந்தியாவில் டூபோர்க் எனும் வாட்டர்பாட்டில் பிராண்டை விளம்பரம் செய்கிறது. இது பற்றிய விளம்பரப் படத்தில் சினிமா நடிகர்கள் ஒரு ரூப் டாப் டான்ஸ் பார்ட்டியில் டில்ட் யுவர் வேர்ல்டு என்ற ஸ்லோகனுக்கு நடனம் ஆடுகின்றனர். இதே ஸ்லோகனை வைத்துதான் டூபோர்க் பீர் விளம்பரம் செய்யப்படும். இந்த டான்ஸ் விளம்பரப் படத்தில் பொறுப்புடன் மது அருந்துங்கள் என்ற துண்டு அறிவுரை இடம் பெற்றிருக்கும்.
மற்றொரு மது பானம் தயாரிப்பு நிறுவனமான டியாகோ தனது பிளாக் அண்டு ஒயிட் ஜிஞ்சர் ஏல் விற்பனைக்காக யூடியூப் விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தை 6 கோடி பேர் பார்த்துள்ளனர். இதில் டியாகோவின் ஸ்காட்ச் விஸ்கியான பிளாக் அண்டு ஒயிட் டெர்ரியர்ஸ் மறைமுகமாக விளம்பரம் செய்யப்பட்டிருக்கும்.
மத்திய அரசு கொண்டுவரும் புதிய விதிகள் இந்தியாவில் உள்ள மதுபானத் தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். உலகின் எட்டாவது பெரிய மதுபானச் சந்தையான இந்தியாவில் ஆண்டுக்கு 45 பில்லியன் டாலர்கள் விற்பனை ஆவதாக தெரிகிறது.
இந்தியாவில் 1.4 பில்லியன் பேர் மது அருந்துகின்றனர். அவர்களிடையே யுனைட்டெட் பிரூவரீஸின் கிங்பிஷர் பீர், இந்திய சந்தையில் கால்பகுதியை பிடித்துள்ளது. விஸ்கிக்குப் புகழ்பெற்ற டியாகோ மற்றும் பெர்னாட் சந்தையில் ஐந்தில் ஒரு பங்கை பிடித்துள்ளன. உலக அளவில் பத்தில் ஒரு பங்கை பெர்னாட் இந்தியாவில் சம்பாதிக்கிறது.
புதிய விதிகளின்படி மறைமுக விளம்பரங்கள் மூலம் தங்களது மதுபானங்களையே நிறுவனங்கள் ஊக்குவிக்கின்றன என்பதால் அதற்கேற்ப அபராதங்கள் நிர்ணயிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட விளம்பரங்களை தயாரித்து வெளியிட்ட மதுபான தயாரிப்பு நிறுவனங்களுக்கு ரூ.50 லட்சம் அபராதமும் அவற்றின் தயாரிப்புகளுக்கு மூன்று ஆண்டுகள் தடையும் விதிக்கப்படும்.
மதுபான விளம்பரங்களுக்குத் தடை விதிப்பது பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு நல்லது விளைவிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அதன் புள்ளிவிவரங்கள் படி 2030க்குள் இந்தியாவில் சராசரியாக ஒருவர் 7 லிட்டர் மதுவை அருந்துவார் எனக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் சீனாவில் இது 5.5 லிட்டராகக் குறையும் எனக் கூறப்பட்டுள்ளது. மதுப்பழக்கத்தினால் இந்தியாவில் 1 லட்சம் பேருக்கு 38.5 பேர் மரணம் அடைகின்றனர்.
Story Written by: Jayachandran
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications