பட்ஜெட் 2024: 300 யூனிட் இலவச மின்சாரம், ரூ.18000 சேமிப்பு.. டக்கரான திட்டத்தை பெறுவது எப்படி..?

புதிய நாடாளுமன்றத்தில் முதல் முறையாக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கவனிக்கத்தக்கது பிரதமர் சூர்யோதய யோஜனா.

சூரியசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து அதனை வீடுகளுக்கு பயன்படுத்துவது தான் இந்த திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடும் குறையும்.

பட்ஜெட் 2024: 300 யூனிட் இலவச மின்சாரம், ரூ.18000 சேமிப்பு.. டக்கரான திட்டத்தை பெறுவது எப்படி..?

நிர்மலா சீதாராமன் அறிவித்தது என்ன?: வீட்டின் மாடியில் சோலார் பேனல்கள் அமைத்து சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து பயன்படுத்தும் 1 கோடி வீடுகளுக்கு மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார்.

மக்கள் வீடுகளில் சோலார் பேனல்களை அமைப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது இதன் மூலம் ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை மின்சார கட்டணம் சேமிக்க முடியும்.

சூரிய ஒளி மின்சாரத்தின் முக்கியத்துவம்: தற்போது மின்சாரம் உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் கரி உள்ளிட்டவைகளால் சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு விளைகிறது. இந்த நிலையில் புவி வெப்பமயமாதலை தடுக்க கார்பன் வெளியீட்டை குறைக்க வேண்டி இருக்கிறது. இதற்கு நிலக்கரி பயன்பாடு குறைய வேண்டும். நாம் சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரித்து தன்னிறைவு அடைந்துவிட்டால் நிலக்கரி பயன்பாடு குறைந்து கார்பன் வெளியீடும் குறையும்.

பிரதமர் சூர்யோதய யோஜனா என்றால் என்ன?: கடந்த ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு இது. அதாவது மொட்டை மாடியில் சோலார் பேனல்கள் அமைத்து அதன் மூலம் வீடுகளுக்கான மின்சாரத்தை தயாரித்து தன்னிறைவு அடைவது இதன் நோக்கம்.

மக்கள் இதனை பெரிய இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில் தான் சோலார் பேனல் அமைத்தால் மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பு வந்துள்ளது.

சூர்யோதய யோஜனாவின் நன்மைகள் என்ன?: இந்த திட்டம் மூலம் பொதுமக்களுக்கு மின்சார கட்டணம் குறையும். குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்காகவே இது கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக கூடுதலாக நிலம் தேவையில்லை, நம் வீட்டு மாடியிலேயே அமைக்கலாம். மின்சார விநியோகத்துக்கு என லைன்கள் இணைக்கப்பட வேண்டியதில்லை. மின்சார இழப்பு குறையும், கார்பன் வெளியேற்றமும் குறையும் என்பதால் சுற்றுசூழலுக்கும் உகந்தது

எப்படி விண்ணப்பம் செய்வது?: உங்கள் வீட்டிற்கு அருகே இருக்கும் மின் வாரிய அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் அனுமதி அளித்த உடன், உரிய நிறுவனத்தை தொடர்பு கொண்டு வீட்டின் மேல்பகுதியில் சோலார் பேனல்களை அமைக்கலாம்.

மின்வாரிய ஊழியர்களும் வந்து இவற்றை சோதனை செய்வர். சில மாநிலங்களில் சோலார் பேனல்கள் அமைக்க மானியம் கூட வழங்கப்படுகிறது. விரைவில் சூர்யோதய யோஜனா மூலம் உங்களுக்கு கூட 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+