உத்தரப்பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுஷில் சிங் தனது கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்திக் கொண்டவர். இப்போது மூன்று நிறுவனங்கள், ஒரு தொண்டு நிறுவனத்துக்கு அதிபராக உள்ளார். வெற்றிபெறுவோமா என்று தன்மீது சந்தேகம் கொண்டுள்ள எவருக்கும் அந்தக் குறையைப் போக்குவதற்கான வாழும் எடுத்துக்காட்டாக சுஷில் சிங் விளங்குகிறார்.
கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டாலும் மூன்று நிறுவனங்களையும் ஒரு தொண்டு நிறுவனத்தையும் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளார். கடின உழைப்பு, மனோதிடம், தனது கனவுகளை விட்டுக்கொடுக்காத மனப்பான்மைக்கு ஆடுகளமாக அவரது வாழ்க்கை அமைந்துள்ளது.

உண்மையிலேயே அடித்தட்டில் இருந்து உச்சாணிக் கொம்புக்கு உயர்ந்தது போன்றது தான் சுஷில் சிங்கின் கதையும். உத்தரப் பிரதேசத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர் சுஷில் சிங். அவரது குடும்பம் மிக ஏழ்மையானது. இருப்பினும் அவரது பெற்றோர்கள் கல்வியின் முக்கியத்துவத்தை அவருக்கு ஊட்டியது. அவரது தந்தை ஒரு செக்யூரிட்டி கார்டு. தாய் இல்லத்தரசி. அவர்களது குடும்பம் ஒரு குடிசையில் வசித்து வந்தது.
கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்ட சுஷில் தனது செலவுகளை சமாளித்துக் கொள்ளும் அளவுக்கு ஒரு வேலையைத் தேடிக் கொண்டார்.
வியாபாரத்தின் அடிப்படைகளை அவர் அனுபவ அறிவு மூலம் கற்றறிந்தார். ஓய்வாக இருக்கும் நேரத்தில் பிசினஸ் நிர்வாகம், சைக்காலஜி, உலக சரித்திரம், அரசியல் உள்பட ஏராளமான புத்தகங்களை படித்துக் கொண்டே இருப்பார்.
பள்ளியில் அவர் நன்றாகப் படித்ததால் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் படிக்க அவருக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அலகாபாத்தில் படிக்கும் காலத்தில் அவர் மகிழ்ச்சியாகவே இருந்தார். ஆனால் விரைவிலேயே தனக்கென்று ஒரு தொழிலைத் தொடங்கவேண்டும் என்று விரும்பத் தொடங்கினார்.
இதனால் அவர் பட்டப்படிப்பின் இரண்டாம் ஆண்டில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஒரு டெலிகாலர் வேலையில் சேர்ந்தார். அந்தத் தொழிலின் நுணுக்கத்தைத் தெரிந்து கொண்டு அவரே சொந்தமாக SSR Techvision என்ற ஒரு பிபீஓ கம்பெனியை தொடங்கினார்.
SSR Techvision மாபெரும் வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து சுஷில் தனது தொழிலை விரிவாக்கினார். இரண்டாவதாக Deebaco என்ற சர்வதேச B2C ஃபாஸ்ட் பேஷன் இ-காமர்ஸ் பிளாட்பாரத்தை ஆரம்பித்தார். அடுத்ததாக Saiva System என்ற ஒரு குளோபல் ஐடி கன்சல்டிங் நிறுவனத்தைத் தொடங்கினார்.
இன்றைக்கு சுஷில் சிங் ஒரு மில்லியனராகவும் சாதனை தொழிலதிபராகவும் விளங்குகிறார். ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்காக தாராளமான நன்கொடைகளை வழங்குகிறார்.
சுஷில்சிங்கின் வாழ்க்கை நம் எல்லோருக்கும் ஓர் உத்வேகமாக இருக்கும்.
நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து வந்திருந்தாலும் நமது கனவுகள் நனவாகுவதற்கு நிச்சயம் வாய்ப்புண்டு என்பதை இது சுட்டிக் காட்டுகிறது. சுஷில் சிங்கால் முடிந்தது என்றால் நம்மாலும் முடியும்.
சுஷில் சிங்கின் வாழ்க்கை மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்:
-எப்போதும் மனம் தளராதீர்கள். வெற்றியை எட்டும்வரை சுஷில்சிங் பல தடைகளை சந்தித்தார். ஆனால் அவர் எப்போதும் தான் ஒரு தொழில்அதிபர் ஆவோம் என்ற கனவை மட்டும் மறக்கவில்லை. கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு. சுஷில் சிங் தனது தொழிலைப் பெருக்குவதற்காக கடினமாக உழைத்தார். நீண்ட நேரம் வேலை செய்தார். குறுக்கு வழிகளை அவர் தேர்ந்தெடுக்கவில்லை.
- ரிஸ்க் எடுக்கத் தயாராக இருங்கள். சுஷில் சிங் தனது தொழில்களை தொடங்கும்போது தயங்காமல் ரிஸ்க் எடுத்தார். வெற்றிக்கு உத்தரவாதம் இல்லை என்ற போதும் தன்மீது பணயம் வைத்து உழைத்தார்.
- செய்யும் வேலையில் ஈடுபாடு காட்டுங்கள். தொழில் மீது சுஷில் சிங்குக்கு அர்ப்பணிப்பு அதிகம். சொந்தத் தொழிலைத் தொடங்கி நடத்துவதற்காக எந்த சவாலையும் சந்திக்க அவர் துணிந்திருந்தார்.
-மற்றவர்களுக்கு உதவுங்கள். ஏழைக்குழந்தைகளின் கல்விக்காக சுஷில் சிங் தாராளமாக நன்கொடைகளை வழங்கினார். எல்லோருக்கும் வெற்றியை அடைவதற்கு வாய்ப்பு தரப்படவேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.
சுஷில் சிங் நிச்சயம் நமக்கு ஒரு முன்னோடியாக விளங்குவார். எதுவும் சாத்தியம் என்பதற்கான வாழும் எடுத்துக்காட்டு சுஷில் சிங். எனவே மனம் தளராமல் எண்ணிய செயலை முடிக்கவேண்டும், கடினமாக உழைக்க வேண்டும், ரிஸ்க் எடுக்க துணிய வேண்டும். செய்யும் தொழிலில் ஆர்வம் இருக்க வேண்டும். பிறருக்கு உதவ வேண்டும் என்ற கோட்பாட்டை நாமும் பின்பற்றி சாதிக்க வேண்டும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!



Click it and Unblock the Notifications