SUV எல்லாம் இனி செட் ஆகாது.. மீண்டும் பழையப்படி குட்டி காருக்கு மாறிய மக்கள்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அடுத்த பல்வேறு பிரச்சனைகளும், மாற்றங்களும் நடந்து வரும் காரணத்தால் மக்கள் மத்தியில் காருக்கான விருப்பத்தில் எதிர்பாராத டிவிஸ்ட் ஏற்பட்டு உள்ளது.

கடந்த 4-5 வருடங்களாக இந்தியா முழுவதும் மக்கள் பெரிய கார்கள் அதாவது எஸ்யூவி கார்களை அதிகம் விரும்பி வந்த நிலையில் தற்போது 2 முக்கிய பிரச்சனையாக மீண்டும் சிறிய கார்களின் பக்கம் மக்கள் செல்ல துவங்கியுள்ளனர். இதனால் கார் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் மாற்றத்தையும், பெரும் நெருக்கடியையும் சந்தித்து வருகிறது.

SUV எல்லாம் இனி செட் ஆகாது.. மீண்டும் பழையப்படி குட்டி காருக்கு மாறிய மக்கள்!

மக்களின் விருப்பம் மாற 2 முக்கியமான காரணம்

1. எரிபொருள் விலை உயர்வு, பொதுவாக பெரிய கார்களின் மைலேஜ் குறைவு என்பதால் பெட்ரோல், டீசல் விலை உயர்வாக இருக்கும் போது புதிய கார் வாங்குவோர் மத்தியில் இது முக்கிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

2. எத்தனால் பிரச்சனை தற்போது மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது, எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்துவது மூலம் காரின் மைலேஜ் குறைவது தாண்டி வாகனங்களின் பாகங்கள் பாதிப்பு அடைவதாக கூறப்படுகிறது. பெரிய கார் வாங்கும் போது E20 பெட்ரோல் மூலம் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் பெரும் பாதிப்பும், செலவுகளும் ஏற்படும் காரணத்தால் சிறிய கார்களை வாங்கிக்கொள்ள மக்கள் தயாராகியுள்ளது.

Also Read

கார் விற்பனை

ஜூன் 2026ல் நாட்டின் மொத்த வாகன விற்பனை வருடாந்திர அடிப்படையில் 22 சதவீதம் அதிகரித்து 26 லட்சம் வாகனங்கள் விற்கப்பட்டு உள்ளது. இதில் பயணிகள் வாகனத்தின் விற்பனை என்பது 29 சதவீகம் அதிகரித்து 410000 வாகனங்கள் விற்கப்பட்டு உள்ளது.

இந்த விற்பனை உயர்வில் ஆட்டோமொபைல் சந்தைக்கு அதிர்ச்சி கொடுக்கும் விஷயம் என்னவென்றால் முதல்முறையாக கார் வாங்கும் மக்கள் மத்தியில் கடந்த சில வருடங்களாக இருந்து வந்த SUV மோகம் குறைந்து சிறிய கார்களுக்கு அதிகம் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த மாற்றத்தில் மிகப்பெரிய வெற்றியாளர் யாரென்றால் மாருதி சுசூகி தான். இந்தியாவிலேயே அதிகப்படியான என்டரி லெவல் கார்களை கொண்டிருக்கும் நிறுவனமாக விளங்கும் மாருதி மார்ச் காலாண்டில் முதல் முறை கார் வாங்கும் மக்களின் 51 சதவீத வர்த்தகத்தை பெறு அசத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பின்பு குடும்பத்தில் இருக்கும் அனைவரும் பயணிக்க ஒரு கார் வேண்டும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் அதிகமாக உருவானது. இதனாலேயே எஸ்யூவி கார் மோகம் உருவாகி மாருதி சுசூகி நிறுவனத்தையும் இப்பிரிவில் கவனம் செலுத்த தள்ளியது. ஆனால் கார் சந்தையில் ஹேட்ச்பேக் கார் மீண்டும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஜூன் மாதம் மட்டும் மாருதி சுசூகி சுமார் 24 கார்களை டெலிவரி செய்து மொத்தம் 1,47,187 கார்களை விற்றுள்ளது. இதில் சிறிய கார்களான ஆல்டோ, எஸ்-பிரெசோ கார்களின் விற்பனை 78 சதவீதம் அதிகரித்துள்ளது. காம்பேக்ட், மிட் சைஸ் செடான் கார்களின் விற்பனை 16 சதவீதம் அதிகரித்துள்ளது. இதேபோல் எஸ்யூவி கார்களின் விற்பனை 29 சதவீதம் அதிகரித்துள்ளது.

அடுத்த முக்கியமான மாற்றமாக ஜூன மாதம் விற்கப்பட்ட 4 லட்சம் கார்களில் எலக்ட்ரிக், ஹைப்ரிட், சிஎன்ஜி வாகனங்களின் பங்கீடு 38 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+