இந்தியாவில் காற்றலை உற்பத்தியில் முன்னணி நிறுவனமான சுஸ்லான் எனர்ஜியின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் துல்சி தந்தி மாரடைப்பால் காலமானார்.
அக்டோபர் 1 அன்று துல்சி தந்திக்கு ஏற்பட்ட மாரடைப்பால் தனது 64வது வயதில் காலமானார்.
உலகளவில் பல நாடுகளில் தனது வணிகத்தினை செய்து வரும் சுஸ்லான் எனர்ஜி, தேசிய பங்கு சந்தை மற்றும் மும்பை பங்கு சந்தையிலும் பட்டியலிடப்பட்டுள்ளது.
தொழிற்துறைக்கும் பேரிழப்பு
சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் வளர்ச்சியில் தொடர்ந்து முக்கிய பங்கினை வகித்து வந்த தலைவரான துல்சி தந்தி, இக்கட்டான சவாலான காலகட்டத்தில் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர். மொத்தத்தில் துல்சியின் இழப்பு நிறுவனத்திற்கும், அவரின் குடும்பத்திற்கும் மட்டும் அல்ல, தொழிற்துறைக்கும் பேரிழப்பு எனலாம்.
சுஸ்லான் எனர்ஜி
சுஸ்லான் எனர்ஜி 1995ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் காற்றாலை உற்பத்தியில் பெரும் புரட்சியினையும் ஏற்படுத்தியவர்.
சுஸ்லான் நிறுவனம் அதன் உரிமை பங்கு வெளியீடு மூலம் 1200 கோடி ரூபாயினை திரட்ட திட்டமிட்டு வந்த நிலையில், அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தது. இத்தகைய நேரத்தில் துல்சியின் மறைவு, நிறுவனத்திற்கு பெரும் இழப்பாக வந்துள்ளது.
செயல்பாடு
கடந்த 2008ம் ஆண்டில் சர்வதேச பொருளாதாரம் மோசமான சரிவினைக் கண்ட நிலையில், சுஸ்லான் குழுமமும் பெரும் நிதி சிக்கலில் தவித்தது. எனினும் அத்தகைய இக்கட்டான சூழலில் இருந்து நிறுவனத்தினை மீட்டு, இன்று 1.6 பில்லியன் டாலர் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக உருவெடுக்க மூலகாரணமாக இருந்தவர். சுஸ்லான் தற்போது 18 நாடுகளிலும், 6 கண்டங்களிலும் வணிக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.
காற்று மனிதர்
உலகளாவிய அளவில் எனர்ஜி துறையில் முக்கிய பங்கு வகிக்கும் சுஸ்லான் எனர்ஜி, நம்பகமான ஒன்றாக இருந்து வருகின்றது. மேலும் மலிவு விலையில் தனது சேவையை செயல்படுத்துவதிலும் துல்சி உறுதியாக இருந்தார்.
இந்திய காற்றாலை சங்கத்தின் தலைவராகவும் (IWTMA), டெல்லியில் உள்ள TERI பல்கலைக் கழகத்தின் நிர்வாக குழுவின் உறுப்பினராகவும் இருந்தவர். பல்வேறு உயரிய விருதுகளை பெற்றுள்ள இவர், இந்தியாவின் காற்று மனிதர் என்றும் கருதப்படுகிறார்.


Click it and Unblock the Notifications