மீண்டும் தமிழ்நாட்டை தேடி வந்த Suzlon Energy நிறுவனம்.. தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஜாக்பாட்..!!

இந்தியாவில் காற்றாலை நிறுவனங்களுக்கு விருப்பமான முதலீட்டு மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது. அந்த வகையில் முன்னணி புதுப்பிக்க தக்க எரிசக்தி நிறுவனமான சுஸ்லான் எனர்ஜி நிறுவனம் (Suzlon Energy) தமிழகத்தில் 200 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சுஸ்லான் எனர்ஜி நிறுவனம் காற்றாலை உற்பத்திக்கு தேவையான Wind-Blade தயாரிப்பு ஆலை ஒன்றை அமைக்கவுள்ளது. இந்த புதிய ஆலை தூத்துக்குடி - மேலக்கரந்தை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் 40 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையானது 1 GW உற்பத்தி திறனுடன் செயல்படும்.

மீண்டும் தமிழ்நாட்டை தேடி வந்த Suzlon Energy நிறுவனம்.. தூத்துக்குடி மாவட்டத்துக்கு ஜாக்பாட்..!!

தூத்துக்குடியில் அமையும் இந்த ஆலை மிகவும் அதிநவீன வசதிகள் கொண்ட தொழிற்சாலையாக இருக்கும். உற்பத்தி திறனை மேம்படுத்தவும், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் பெருமளவில் பயன்படுத்தப்படவுள்ளதாக சுஸ்லான் குழுமத்தின் இணை நிறுவனர் கிரீஷ் தந்தி தெரிவித்துள்ளார்.

இந்த ஆலைக்கான தொடக்கநிலை பணிகள் முடிந்துள்ள நிலையில் இது 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்திற்குள் முழுமையாக செயல்பட தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கே உற்பத்தி செய்யப்படும் காற்றாலை உபகரணங்கள் இந்தியாவில் பயன்படுத்தப்படும் என்றும் வருங்காலங்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

இந்த புதிய ஆலை மூலமாக நேரடியாக 500-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளும், மறைமுகமாக சுமார் 1,500 வேலைவாய்ப்புகளும் என மொத்தம் 2,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். சுஸ்லான் நிறுவனம் நீண்ட காலமாகவே தமிழ்நாட்டில் தனது தொழிலை மேற்கொண்டு வருகிறது.புகழ்பெற்ற மூப்பந்தல் காற்றாலை தொகுதியில் செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் கோயம்புத்தூரில் பெரிய அளவிலான ஃபோர்ஜிங் (Forging) ஆலை ஒன்றையும் இந்நிறுவனம் நடத்தி வருகிறது.

Also Read

கடந்த 30 ஆண்டுகளில் இந்நிறுவனம் 775 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது., இதன் மூலம் 2000 நேரடி வேலைவாய்ப்புகளும் 1500 மறைமுக வேலைவாய்ப்புக்ளும் உருவாகியுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் துறைமுகம் கொண்டுள்ளதால் ஏற்றுமதியை இலக்காக கொண்டு செயல்படும் பல நிறுவனங்களும் இங்கே போட்டி போட்டு கொண்டு முதலீடுகளை மேற்கொள்கின்றன. அந்த வகையில் சுஸ்லான் நிறுவனமும் இங்கே கால் பதிக்கிறது.

Recommended For You

கடந்த ஜூன் மாதம் சுஸ்லான் நிறுவனம் தனது 2.0 வளர்ச்சி திட்டத்தை வெளியிட்டது. இதன் கீழ், அடுத்த 5 ஆண்டுகளுக்கு 2,500 கோடி மூலதன செலவு திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், 2031-ஆம் நிதியாண்டிற்குள் ஆண்டுதோறும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விற்பனையை 10 GW ஆக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.சுஸ்லான் எனர்ஜியின் இந்த புதிய முதலீடு தமிழகத்தின் தொழில்துறை வளர்ச்சிக்கும், நாட்டின் பசுமை எரிசக்தி இலக்குகளுக்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+