சுஸ்லான் எனர்ஜி பங்குகள், இந்தியாவில் பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு சமீப காலத்தில் அதிகம் பரிச்சயமான ஒரு பங்கு. இந்த ஆண்டு 20 சதவீதம் வரையில் சரிந்திருந்தாலும், குறுகிய கால அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு பிடித்தமான நிறுவனமாக இருந்து வருகிறது.
2024 செப்டம்பர் மாதம் வரையில் தொடர் ஏறுமுகத்தில் இருந்த பங்கு விலை, இந்த வருடம் பெரும் சரிவை எதிர்கொண்டு உள்ளது. இப்படியிருக்கையில் சுஸ்லான் எனர்ஜி பங்குகள் 43 சதவீதம் வரையில் உயரும் வாய்ப்பை கொண்டு இருப்பதாக ப்ரோக்கரேஜ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டு பிறக்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், பங்குச்சந்தை முதலீடுகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்கு ஏற்றார் போல் ப்ரோக்கரேஜ் நிறுவனங்கள் அடுத்தடுத்து தனது ஆலோசனைகளையும், பிரிந்துரைகளையும் முன்வைத்து வருகிறது.
இப்படி நாட்டின் மிகவும் பிரபலமான ப்ரோக்கரேஜ் நிறுவனமான மோதிலால் ஓஸ்வால், சுஸ்லான் எனர்ஜி பங்கிற்கு "BUY" என்ற ரேட்டிங்கை கொடுத்து தொடர்ந்து தனது பரிந்துரையை தக்க வைத்துள்ளது. இந்நிறுவனத்தின் நிர்வாகத்துடன் சமீபத்தில் நடத்திய சந்திப்புக்குப் பிறகு மோதிலால் ஓஸ்வால் நிறுவனம் சுஸ்லான் எனர்ஜி பங்கிற்கு ரூ.74 என்ற டார்கெட் விலையை நிர்ணயித்துள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் சுஸ்லான் எனர்ஜி பங்கு விலை ரூ.51.89ஆக இருந்த நிலையில் இது 43 சதவீத வளர்ச்சி வாய்ப்பை குறிக்கிறது. வாரத்தின் முதல் நாளான இன்று 0.10 சதவீதம் சரிந்து 51.69 ரூபாயாக உள்ளது.
உலகின் முன்னணி முதலீட்டு வங்கியான மார்கன் ஸ்டான்லி சுஸ்லான் பங்குக்கு "ஓவர்வெயிட்" மதிப்பீட்டை கொடுத்துள்ளது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது. மார்கன் ஸ்டான்லி-யின் டார்கெட் விலை ரூ.78 ஆகும். 2025இல் சுஸ்லான் எனர்ஜி பங்கு இதுவரை பங்கு 20 சதவீதம் சரிந்திருந்தாலும், வெள்ளிக்கிழமை 2 சதவீதம் உயர்ந்து ரூ.51.89இல் முடிந்தது கவனிக்கப்படும் விஷயமாக உள்ளது.
டிசம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் சுஸ்லான் எனர்ஜி நடத்திய உற்பத்தி தின நிகழ்ச்சியில் இந்நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம் பேசியது. அப்போது மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களில் ஏற்பட்ட மந்த நிலை குறுகிய கால ஆர்டர்களை அதிகம் பாதிக்காது என்று தெரிவித்தது. தற்போது 15 கிகாவாட் காற்றாலை ஆர்டர்கள் ஏலம் அல்லது ஒதுக்கீடு நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
AI மற்றும் டேட்டா சென்டர்களால் ஏற்படும் மின்தேவை காரணமாக 2028ஆம் நிதியாண்டுக்குள் ஆண்டுக்கு 10 கிகாவாட் காற்றாலை நிறுவல் சாத்தியம் என்று சுஸ்லான் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது 2030க்கான 100 கிகாவாட் இலக்கை வேகமாக எட்டி வழி வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுஸ்லான் பங்கு கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்தைக் கண்டாலும், நீண்டகால வளர்ச்சி வாய்ப்புகளைப் பார்த்து முன்னணி புரோக்கரேஜ்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications