சந்தையில் இப்போது உள்ள கார்களை விட அதிக மைலேஜ் தரக்கூடிய ஹைப்ரிட் கார்களை தயாரிக்க ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான சுசூகி செயல்பட்டு வருகிறது. இந்தத் தகவலை மாருதி சுசூகி தலைவர் பார்கவா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பார்கவா மேலும் கூறுகையில், விலைகுறைந்த கார்களை தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக சுசுகி ஜப்பான் சிறிய ரக ஹைப்ரிட் கார்களை தயாரிக்க உள்ளது. ஹைப்ரிட் கார்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் மக்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய சிறிய ரக ஹைப்ரிட் கார்களை தயாரிக்க சுசூகி முடிவெடுத்துள்ளது. இந்தக் கார்கள் கூடுதல் மைலேஜை தரக்கூடியவை என்பதால் மக்களை பெரிய அளவில் கவரும். சுசூகி தனது மேம்படுத்தப்பட்ட டெக்னாலஜியை வைத்து சிறிய ரக ஹைப்ரீட் கார்களை தயாரிக்க உள்ளது. இதன் மூலம் எரிபொருள் சேமிப்பை தரும் மலிவான விலையிலும் கார்களையும் தர முடியும்.
இது சாத்தியமானால் இன்றைக்கு உள்ள கார்களை விட இந்த சிறிய ரக ஹைப்ரீட் கார்கள் கூடுதல் மைலேஜுடன் கிடைக்கும். இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 5 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்படுகிறது. ஆனால் ஹைப்ரீட் கார்களுக்கு 43 சதவீதம் விதிக்கப்படுகிறது. பெட்ரோல் கார்களுக்கு 48 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது என்றார்.
அண்மையில் ஹைப்ரீட் வாகனங்களுக்கான வரியை 5 சதவீதமாகவும், பிளேக்ஸ் இன்ஜின் வாகனங்களுக்கு 12 சதவீதமாகவும் ஜிஎஸ்டியை குறைப்பதற்கான முன்மொழிவை நிதி அமைச்சகத்துக்குத் தரப்பட்டதாக அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
விலையை வைத்து தான் ஹைப்ரீட் வாகனங்களின் விற்பனை உள்ளது. இந்த நிலையில் வரி குறைப்பு பற்றி ஜிஎஸ்டி கவுன்சில் என்ன முடிவை எடுக்கும் என்பது தெரியவில்லை.
இந்திய மக்களவைத் தேர்தலுக்குப் பின் இது பற்றி ஒரு முடிவு தெரிய வரும். அதுவரை சில மாதங்களுக்கு காத்திருக்க வேண்டியதுதான்.
அதன் பின்னர் ஹைப்ரீட் கார்கள் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகளவில் தயாரிக்கப்படும் என்று மாரூதி சுசூகி தலைவர் பார்கவா கூறினார்.
மாருதி சுசூகியின் நிர்வாக இயக்குநரும் சிஇஓவுமான ஹிசாஷி டேக்குச்சி கூறுகையில், இப்போதைக்கு பிளக்-இன்-ஹைப்ரீட் கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் எண்ணம் நிறுவனத்துக்கு இல்லை என்று கூறினார்.
இதனிடையே ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் அடுத்த ஆண்டில் முதல் பிளக்-இன் ஹைப்ரீட் எலக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
நடப்பு நிதியாண்டில் இந்திய சந்தையில் தனது மின்சார வாகனத்தை உற்பத்தி செய்ய மாருதி சுசூகி திட்டமிட்டுள்ளது. ஆரம்பத் தொகுப்பை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான உறுதிமொழியின் காரணமாக, 2025-26 நிதியாண்டுக்குள் இந்த வாகனம் உள்நாட்டு சந்தையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2030-31 நிதியாண்டில், சிஎன்ஜி, உயிர்வாயு, நெகிழ்வு எரிபொருள் வாகனங்கள், எத்தனால் மற்றும் கலப்பு எரிபொருள் போன்ற உள் எரிப்பு இயந்திரம் வாகனங்கள் விற்பனையில் 60% இருக்கும் என்று கார் உற்பத்தியாளர் எதிர்பார்க்கிறார். இதைத் தொடர்ந்து, விற்பனையில் 25% ஹைப்ரிட் மின்சார வாகனங்களாகவும், 15% பேட்டரி மின்சார வாகனங்களாகவும் இருக்கும்.
நடப்பு நிதியாண்டில் சிஎன்ஜி கார்களுக்கு 600,000 யூனிட்களை எட்டுவது இலக்கு. 2023-24 நிதியாண்டில், நிறுவனம் 450,000 யூனிட் சிஎன்ஜி மாடல்களை விற்பனை செய்துள்ளது. கூடுதலாக, நிறுவனம் அதன் உற்பத்தி ஆலைகளுக்கு மின்சாரம் தயாரிக்க சிஎன்ஜி பயன்படுத்துவதை ஆராய்ந்து வருகிறது.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications