உலகம் முழுவதும் மின்னணு சாதனங்கள், கார்கள், மின்சார வாகனங்கள், காற்றாலைகள், மருத்துவ கருவிகள் என முக்கியமான பொருட்களின் உற்பத்திக்கு அரிய வகை காந்தம் பயன்படுத்தப்படுகிறது. இந்த அரிய வகை காந்தம் சீனாவில் இருந்து தான் அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த அரிய வகை காந்தத்தை பிரித்தெடுப்பது மிக நுணுக்கமான வேலைப்பாடு கொண்டது. இதில் சீனாவே நிபுணத்துவம் பெற்றுள்ளது. எனவே உலகம் முழுவதும் இருக்கும் உற்பத்தியாளர்கள் இவ்வகை காந்தத்தை சீனாவிடம் இருந்து மட்டுமே பெற்று வந்தனர். ஆனால் அதில் தான் தற்போது பிரச்சினை எழுந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச இறக்குமதி வரியை விதித்தார். இதற்கு பதிலடி தரும் வகையில் சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்தது. மேலும் தங்கள் நாடு மட்டுமே சப்ளை செய்து வந்த அரிய வகை காந்தத்தின் ஏற்றுமதியை நிறுத்தி வைத்தது.
சீனா அரிய வகை காந்தங்களின் ஏற்றுமதியை நிறுத்தி வைத்திருப்பதன் காரணமாக சுசுகி மோட்டார்ஸ் நிறுவனம் ஸ்விப்ட் (Swift) ரக கார்களின் உற்பத்தியை நிறுத்தி வைத்திருக்கிறது. ஜப்பானை சேர்ந்த சுசுகி மோட்டார்ஸின் பிரதான மாடல் காராக ஸ்விப்ட் ரக கார்கள் இருக்கின்றன. இந்தியாவில் அதிகம் விற்பனையாக கூடிய ஒரு காராகவும் இது உள்ளது. இந்த சூழலில் தான் சுசுகி மோட்டார்ஸ் நிறுவனம் தற்காலிகமாக ஸ்விப்ட் ரக காரர்களின் உற்பத்தியை நிறுத்தி வைத்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.
ராய்ட்டர்ஸ் நிறுவனமும் இந்த செய்தியை உறுதி செய்துள்ளது. சீனா தங்கள் நாட்டில் மட்டுமே கிடைக்கும் அரிய வகை காந்தங்களின் ஏற்றுமதியை நிறுத்தி வைத்திருப்பதன் காரணமாக கார் உற்பத்திக்கு தேவையான உபகரணங்கள் கிடைக்காமல் இருப்பதால் இந்த முடிவினை எடுத்திருப்பதாக சுசுகி மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடந்த மே 26 ஆம் தேதியிலிருந்து உபகரணங்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டதன் காரணமாக ஸ்விப்ட் கார்களின் உற்பத்தியை நிறுத்தி வைத்திருக்கிறோம் என சுசுகி மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தற்போதைக்கு ஸ்விப்ட் கார்களில் ஸ்போர்ட்ஸ் வெர்ஷன் கார்கள் மட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. ஜூன் 13ஆம் தேதியிலிருந்து ஸ்விப்ட் ரக கார்கள் உற்பத்தியை பகுதியளவும், ஜூன் 16ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் முழுமையாகவும் கார் உற்பத்தியை தொடங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது. அதற்குள் சீனா இந்த விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என நம்புவதாக தெரிவித்துள்ளது.
மின்னணு சாதனங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி துறைக்கான உபகரணங்கள் ,மருத்துவ உபகரணங்கள் ,பாதுகாப்பு துறைக்கான ஆயுதங்கள் மற்றும் வாகன உற்பத்திக்கான உபகரணங்களுக்கு பல்வேறு நாடுகளும் பயன்படுத்தக்கூடிய அரியவகை காந்தம் சீனாவில் தான் கிடைக்கிறது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சீனா இந்த அரியவகை காந்தத்தின் ஏற்றுமதியை நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால் இந்த பொருட்களின் உற்பத்தியே பாதிக்கப்படும் சூழல் உண்டாகியுள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications