மும்பை: சுசூகி மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணை நிறுவனமான மாருதி சுசூகியின் விற்பனை மேலும் சரிவடையும் என்றும் அந்த நிறுவனம் கணித்துள்ளது.
ஏற்கனவே நிலவி வரும் மந்த நிலையால் இந்த நிறுவனம் பெரும் சரிவைக் கண்டுள்ள நிலையில், மேலும் இதன் விற்பனை 20 சதவிகிதம் குறையும் என்றும் மதிப்பிட்டுள்ளது.

இதில் வேடிக்கை என்னவெனில் இதன் ஜப்பானிய கார் தயாரிப்பாளார் இதற்கு முன்பு 4 சதவிகித வளர்ச்சி காணும் என்றும் கணித்திருந்தார்.
கடந்த செப்டம்பர் காலாண்டுடன் முடிவடைந்த முதல் பாதியில், மாருதி சுசூயின் ஒட்டுமொத்த விற்பனை 25 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், இதே உலகளாவிய விற்பனை 17 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே இதன் ஜப்பானிய பெற்றோர் நிறுவனம் 13.2 சதவிகிதம் இது வீழ்ச்சி காணும் என்றும் மதிப்பிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் வருவாய், செயல்பாட்டு வருவாய், மற்றும் நிகர வருவாய் நடப்பு நிதியாண்டில் முறையே 10.3%, 39.4% மற்றும் 30% குறையும் என்றும் இந்த நிறுவனம் மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆட்டோமொபைல் விற்பனை 2.84 மில்லியனாகவும், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 14.7 சதவிகிதம் குறையும் என்றும் கணித்துள்ளது. இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் விற்பனை 1.77 மில்லியனாக இருக்கும் என்றும், இது முன்பை விட 3 சதவிகிதம் குறைவு என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மாருதி சுசூகி நடப்பு நிதியாண்டில் 1.5 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்யும் என்றும் மதிப்பிட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 2 மில்லியன் வாகங்களாக இலக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மாருதி சுசூகி இந்தியாவின் தலைவர் ஆர்.சி பார்கவா எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், வரவிருக்கும் பி.எஸ் 6 விதிகளினால் அடுத்து வரும் 4 - 5 மாதங்கள் மிகக் கடுமையாகத் தான் இருக்கும். தற்போது மட்டும் அல்ல கடந்த சில மாதங்களாகவே மாருதி சுசூகி சரிவையே சந்தித்து வருகிறது.
மேலும் இந்தியாவின் வளர்ச்சியில் பெரிய மாற்றம் இருக்கும் (-20% வீழ்ச்சி) என்று நான் நம்பவில்லை என்றும் பார்கவா கூறியுள்ளார்.
கடந்த பண்டிகை கால சீசனில் மாருதி சுசூகியின் விற்பனை நன்றாக இருந்தது. எனினும் வரவிருக்கும் மாதங்களில் இந்தியாவில் நிலவி வரும் சில பிரச்சனைகளால் இது குறையக்கூடும் என்றும் பார்கவா கூறியுள்ளார்.
இந்த நிலையில் சிறு கார்களின் விற்பனை 53 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நிலவி வரும் மந்த நிலையில் மாருதி சுசூகி பல்வேறு பிரச்சனைகளை கண்டு வருவதாகவும், மேலும் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கும்போது, அதிகரிக்கும் செலவினங்கள், பணப்புழக்கம் மேலும் பிரச்சனையாக உள்ளதாகவும் பார்கவா தெரிவித்துள்ளார்.
இதனால் மாருதி சுசூகி கடந்த சில மாதங்களாகவே 1 லட்சம் வாகனங்களுக்கு கீழாகத்தான் விற்பனை செய்து வருவதாகவும், இதனால் இந்த நிறுவனத்தின் பங்கு விலை 50 - 55 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தற்போது சந்தையில் பல்வேறு போட்டியாளர்கள் நுழைந்திருப்பதால் மாருதி சுசூகிக்கு இது கடும் போட்டியாகவே இருக்கும். இது ஒரு சிக்கலான நேரம் தான். ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது நாங்கள் இதிலிருந்து மீண்டு வருவோம் என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications