ஜப்பானின் புகழ்பெற்ற கார் உற்பத்தியாளர் நிறுவனமான சுசுகி மோட்டார் கார்ப்பரேஷன், இந்தியாவில் தனது செயல்பாடுகளைப் பெருமளவில் மேம்படுத்துவதற்காக, அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் ரூ.70,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பிரம்மாண்டமான முதலீட்டுத் திட்டம், இந்தியாவில் மின்சார வாகன உற்பத்தியை ஒரு புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு, குஜராத்தில் அமைந்துள்ள சுசுகி மோட்டார் குஜராத் (SMG) தொழிற்சாலையில், மாருதி சுசுகியின் முதல் மின்சார வாகனமான e VITARA-வை பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து ஏற்றுமதிக்குத் தொடங்கி வைத்த பிறகு இந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வலுவான ஹைப்ரிட் மின்சார வாகனங்களுக்கான லித்தியம்-அயன் பேட்டரி செல்களின் உற்பத்தி தொடக்கத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

இந்தியா மீது சுசுகியின் நம்பிக்கை: இந்த நிகழ்வில் பேசிய சுசுகி மோட்டார் கார்ப்பரேஷனின் பிரதிநிதி இயக்குநரும், தலைவருமான தோஷிஹிரோ சுசுகி சுசுகி கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவின் இயக்கப் பயணத்தில் பெருமையுடன் இணைந்துள்ளது. நிலையான பசுமை இயக்கத்திற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையையும், 'விக்ஸித் பாரத்' என்ற திட்டத்தையும் ஆதரிக்க நாங்கள் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளோம் என்று கூறினார்.
சுசுகி அடுத்த 5 முதல் 6 ஆண்டுகளில் இந்தியாவில் ரூ.70,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். சுசுகி குழுமம் ஏற்கனவே இந்தியாவில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்துள்ளது. இந்த முதலீடுகள், மதிப்புச் சங்கிலி முழுவதும் 11 லட்சத்திற்கும் அதிகமான நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. இந்த புதிய முதலீடு, எதிர்காலத்தில் மேலும் பல வேலைவாய்ப்புகளையும், பொருளாதார வளர்ச்சியையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகிற்கான இ-விட்டாரா: மாருதி சுசுகி இந்தியாவின் துணை நிறுவனமான சுசுகி மோட்டார் குஜராத்தில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட e VITARA, உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இங்கிலாந்து, ஜெர்மனி, நார்வே, பிரான்ஸ், டென்மார்க், ஸ்வீடன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு, பிபாவாவ் துறைமுகத்திலிருந்து இந்த மின்சார வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்படும்.
முதல் BEV (Battery Electric Vehicle) வாகனமான e VITARA-வை உற்பத்தி செய்வதற்கும், இந்த மாடலுக்கான உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்கும் இந்த வசதியைத் தேர்ந்தெடுத்தோம். இந்த 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட' மின்சார வாகனத்தை ஜப்பான் மற்றும் ஐரோப்பா உட்பட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம் என்று தோஷிஹிரோ சுசுகி பெருமையுடன் கூறினார்.
ஆத்மநிர்பர் பாரதத்திற்கு ஒரு முக்கியப் பங்களிப்பு: இந்த நிகழ்வில், சுசுகியின் இரண்டாவது முக்கியமான சாதனையாக, வலுவான ஹைப்ரிட் வாகனங்களில் பயன்படுத்தப்படும் எலக்ட்ரோடு-நிலை உள்ளூர்மயமாக்கலுடன் கூடிய இந்தியாவின் முதல் லித்தியம்-அயன் பேட்டரி மற்றும் செல் உற்பத்தியின் தொடக்கத்தை சுசுகி சுட்டிக்காட்டினார். இந்த பேட்டரிகள், குஜராத்தில் உள்ள தோஷிபா டென்சோ சுசுகி ஆலையில் தயாரிக்கப்படுகின்றன.
ஜப்பானிலிருந்து மூலப்பொருட்கள் மற்றும் சில குறைக்கடத்தி பாகங்கள் மட்டுமே வருவதால், இது ஆத்மநிர்பர் பாரதத்திற்கு (தற்சார்பு இந்தியா) ஒரு பெரிய பங்களிப்பு என்று அவர் கூறினார். மேலும், கார்பன் நடுநிலைமை மற்றும் காலநிலை மாற்ற இலக்குகளை அடைய, மின்சாரம், வலுவான ஹைப்ரிட், எத்தனால் நெகிழ்வு எரிபொருள் மற்றும் சுருக்கப்பட்ட பயோகேஸ் உள்ளிட்ட பல-பவர்டிரெய்ன் உத்திகளைப் பயன்படுத்துவோம் என்றும் சுசுகி உறுதி அளித்தார்.
குஜராத் தொழிற்சாலை, 10 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்யும் இலக்குடன், உலகின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் உற்பத்தி மையங்களில் ஒன்றாக வளரும் என்று சுசுகி குறிப்பிட்டார். இந்த முதலீடு, இந்தியாவை ஒரு உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றும் கனவுக்கு ஒரு பெரிய பங்களிப்பாக இருக்கும்.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications