அமெரிக்காவில் திவாலாகியிருக்கும் சிலிக்கான் வேலி வங்கி மூலம் அமெரிக்காவில் மட்டும் இல்லாமல் இந்தியாவிலும் அதிகப்படியான பிரச்சனை உருவாகியுள்ளது, மறுக்க முடியாத உண்மை. அதிலும் முக்கியமாக அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டு இயங்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களும், SAAS பிரிவு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க அரசு SVB Bank எனப்படும் சிலிக்கான் வேலி வங்கியில் டெபாசிட் செய்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தங்களுடைய பணத்தை முழுமையாக அளிக்க உத்தரவாதம் கொடுத்தாலும் அதனை வேறு கணக்கிற்கு உடனடியாக மாற்றுவதிலும் சில சிக்கல்களை இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சந்திக்கும் காரணத்தால் பல நிறுவனங்கள் நிதி புழக்கத்தில் பிரச்சனையை எதிர்கொண்டு உள்ளது.
இதை சரி செய்ய மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் நிதியமைச்சகம் முக்கியமான உதவிகளை செய்ய முடிவு செய்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் செவ்வாய்க்கிழமை சுமார் 400 ஸ்டார்ட்அப் நிறுவனங்களிடம் இத்துறை அமைச்சரான ராஜீவ் சந்திரசேகரன் நடத்திய முக்கியமான கூட்டத்தில் SVB Bank எனப்படும் சிலிக்கான் வேலி வங்கியில் இருக்கும் பணத்தை கையாழுவதில் இருக்கும் பிரச்சனைகளை கேட்டறிந்தார்.
SVB Bank
இதை தொடர்ந்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உறுப்பினர்கள் குழு நிதியமைச்சகத்தை உடனடியாக சந்தித்து ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் SVB Bank எனப்படும் சிலிக்கான் வேலி வங்கியில் இருக்கும் பணத்தை கையாளுவதில் இருக்கும் பிரச்சனைகளை விவரித்து இதற்கு உடனடியாக தீர்வு காண உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
இதில் முக்கியமாக இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சிலிக்கான் வேலி வங்கியில் இருக்கும் பணத்தை இந்தியாவில் இருக்கும் வங்கிகளுக்கு மாற்றும் வாய்ப்பு குறித்து பேசப்பட உள்ளது. இப்படி மாற்றும் போது எவ்விதமான வரி பிரச்சனையும் இருக்க கூடாது என்பதை உறுதி செய்ய உள்ளதாக தெரிகிறது.
இந்திய வங்கிகளின் அமெரிக்க கிளை
இதோடு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு சொந்தமான சிலிக்கான் வேலி வங்கியில் இருக்கும் பணத்தை வேகமாக இடமாற்றம் செய்ய அமெரிக்காவில் இருக்கும் இந்திய வங்கிகளின் கிளைகள் இந்த டெபாசிட் தொகையை உடனடியாக ஏற்றுக்கொள்ள உத்தரவு அளிப்பது குறித்தும் பேசப்பட உள்ளது.
கடன் திட்டம்
இந்த இடைப்பட்ட காலத்தில் நிதி நெருக்கடியிலும், பணப்புழக்கத்தில் பாதிப்புகளை எதிர்கொண்டு இருக்கும் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு சிலிக்கான் வேலி வங்கியில் இருக்கும் தனது பணத்திற்கு எதிராக இந்திய வங்கிகள் கடன் கொடுக்கும் திட்டம் குறித்தும் பேச உள்ளது.
60 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
சிலிக்கான் வேலி வங்கியில் இந்தியாவில் இருக்கும் பல SAAS நிறுவனங்கள் கணக்கு வைத்துள்ளது. இதில் முக்கியமாக அமெரிக்காவின் முன்னணி டெக் ஸ்டார்ட்அப் முதலீட்டு நிறுவனமான YCombinator முதலீடு செய்துள்ள 60 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் SVB BANK -ல் டெபாசிட், வர்த்தக கணக்குகளை வைத்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications