அமெரிக்காவின் பொருளாதாரம் அந்தளவுக்கு மோசமாகியுள்ளது. சிலிக்கான் வேலி வங்கி திவால் என்பது பல நாடுகளையும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. ஆனால் இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இவ்வங்கியின் தலைமை செயல் அதிகாரி செய்த ஒரு செயல் தான். அப்படி என்ன செய்தார்? கவனிக்க வேண்டியது என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் வங்கி தான் சிலிக்கான் வேலி வங்கி. இந்த வங்கி திவால் என்பது தான் பல தரப்பினர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் தாக்கம்
சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தும் பல காரணிகள், அமெரிக்க பொருளாதாரத்தினை மட்டும் அல்ல, சர்வதேச பொருளாதாரத்தினையும் பதம் பார்த்துள்ளது எனலாம். இதற்கு சிறந்த உதாரணம் தான் அமெரிக்காவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சிலிக்கான் வேலி வங்கி திவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சனை வெடிக்கலாமோ?
இது 2008-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது வாஷிங்டன் பிரச்சனையின் மத்தியில், அது மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியது. தற்போதும் அந்த பிரச்சனை போன்று வெடிக்கலாமோ என்ற அழுத்தம் உள்ளது.
ராய்ட்டர்ஸ் அறிக்கையின் படி, மார்ச் 13 அன்று சிலிக்கான் வேலி வங்கியின் அலுவலகங்கள் திறக்கப்படும். இதில் காப்பீடு செய்த முதலீட்டாளர்கள் காப்பீட்டுத் தொகையை பெறுவார்கள் என தெரிகின்றது.
இன்சூரன்ஸ் செய்யப்படவில்லை
எனினும் 2022ம் ஆண்டின் இறுதியில் வங்கியின் 175 பில்லியன் டாலர் டெபாசிட்களில், 89% இன்சூரன்ஸ் செய்யப்படவில்லை என கூறப்படுகின்றது. அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் ஒன்றாக இருக்கும் இவ்வங்கி, தொடர்ந்து வட்டி விகிதம் அதிகரித்து வரும் சூழலில் இப்படி ஒரு முடிவினை எடுத்திருப்பது, முதலீட்டாளர்கள் மத்தியில் மட்டும் அல்ல, வங்கிகள் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பங்கு விற்பனை
இவங்கியின் இத்தகைய பதற்றமான பிரச்சனைகளுக்கு மத்தியில், இவ்வங்கி குழுமத்தின் பங்குகள் கடும் சரிவினைக் கண்டு வருகின்றன. இது ஒரு புறம் எனில் மறுபுறம் இவ்வங்கியின் தலைமை செயல் அதிகாரியான கிரெக் பெக்கர், இவ்வங்கி திவால் அறிவிப்பினை அறிவிக்கும் முன்னதாக 2 வாரங்களுக்குள் 3.6 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்கினை விற்று வெளியேறியுள்ளார்.
சரிவுக்கு என்ன காரணம்?
கிரெக் பெக்கர் பிப்ரவரி 27 அன்று 12,451 பங்குகள் விற்பனையானது, ஒரு வருடத்திற்கும் மேலாக பெக்கர் தனது தாய் நிறுவனமான SVB பைனான்ஷியல் குழுமத்தின் பங்குகளை விற்பனை செய்தது இதுவே முதல் முறையாகும்.
இது முன்னதாக சிலிக்கான் வேலி வங்கி நஷ்டம் அடைந்துள்ளதாகவும், இதற்கிடையில் 2 பில்லியன் டாலர் நிதியினை திரட்ட திட்டமிட்டுள்ளதாகவும், ஆக வாடிக்கையாளர்கள் பொறுமையுடன் இருக்குமாறும் வங்கி தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. எனினும் பங்குகள் விலையானது கடும் வீழ்ச்சியினை கண்டது.
திவால் நடவடிக்கை தீர்மானிக்கப்பட்டதா?
பெக்கரின் பங்கு விற்பனை நடவடிக்கையானது திவால் அறிவிப்பினை கொடுத்தால், பங்கு விலை சரியலாம் என்ற நிலையில் விற்பனை செய்யப்பட்டதா என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளது, ஆக வங்கியின் இந்த திவால் அறிவிப்பு முன்னதாக தீர்மானிக்கப்பட்டதா என்ற கேள்வியினையும் எழுப்பியுள்ளது.
முதலீடு என்னவாகும்?
தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டி உயர்வினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள டெக் ஸ்டார்டப் நிறுவனங்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்களில் சிலிக்கான் வேலி வங்கி அதிகம் முதலீடு செய்துள்ளதை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆக இதன் நிலைப்பாடு குறித்தும் பெரும் கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications