டெல்லி: இந்தியாவில் மக்களின் முதலீடுகள் தங்க நகைகளை மட்டுமே நோக்கி இருந்த நிலையில் அதன் திசையை மாற்றவும் நடப்பு கணக்கு பற்றாக்குறையை போக்கவும் மத்திய அரசு தங்க பத்திரம் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தில் முதலீடு செய்தவர்கள் எல்லாம் கணிசமான லாபத்தை ஈட்டி வருகின்றனர். பொதுவாக இதில் 8 ஆண்டுகள் கழித்து தான் முதிர்வு காலம் வரும். இருந்தாலும் 5 ஆண்டுகள் முழுமை அடைந்த பின்னர் மக்கள் பத்திரங்களை விற்பனை செய்து பணமாக்கலாம். தங்க பத்திர திட்டத்தில் 2017 -18 ஆம் ஆண்டில் பத்தாவது கட்டமாக தங்க பத்திரங்களை அரசு வெளியீடு செய்தது .
2017 ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த தங்க பத்திரங்களில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 2961 ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த பத்திரங்களை 5 ஆண்டுகள் முடிந்து தற்போது விற்பனை செய்ய முடியும்.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின் படி, தற்போது இந்த பத்திரங்களை விற்பனை செய்தால் கூட செய்த முதலீட்டில் இருந்து 158 சதவீத லாபத்தை பெற முடியும். அதாவது ஒரு கிராம் தங்கம் 7,646 என்ற அளவில் இவர்களுக்கு திரும்ப கிடைக்கப் போகிறது. தங்கத்தை நகையாக வாங்குவதற்கு பதிலாக மக்கள் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பதை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு தங்க பத்திர திட்டத்தை கொண்டு வந்தது.
இதன்படி ஒரு ஆண்டில் நான்கு முறை தங்க பத்திரங்கள் வெளியீடு செய்யப்பட்டன. இதில் ரிசர்வ் வங்கி ஒரு கிராம் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்யும் அந்த அளவிற்கு மக்கள் எத்தனை கிராம்களாக வேண்டுமோ அத்தனை கிராம்களுக்கு பத்திரங்களாக வாங்கி கொள்ளலாம். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவை முதிர்ச்சி அடையும் என்றும் ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டி இதற்கு வழங்கப்படும் என்றும் அப்போது மத்திய அரசு அறிவித்தது.
அந்த வகையில் மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்ட பத்தாவது கட்ட தங்க பத்திரங்கள் டிசம்பர் 4ஆம் தேதிக்கு பின்னர் விற்பனை செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு பத்திரங்களை முதிர்வு காலத்திற்கு முன்னர் ஆனால் 5 ஆண்டுகளுக்கு பின்னர் விற்பனை செய்பவர்களுக்கு வரி சலுகைகளும் கிடைக்கின்றன. அதாவது வருமான வரி சட்டத்தின் படி, இதில் கிடைக்கும் வருமானத்தில் நீண்ட கால மூலதன ஆதாய வரி வசூலிக்கப்படாது. எனவே இதனை வருமான வரி கணக்கு தாக்கலின் போது கூட வருமானமாக குறிப்பிடத் தேவையில்லையாம்.
Written by: Devika
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications