வாழ்க்கையில் வெற்றி மீது வெற்றியைக் கூட்டிக்கொண்டே செல்ல வேண்டும் என்பதே பெரும்பாலான தொடக்ககால தொழிலதிபர்களின் கனவாகும். அப்படியொரு கனவு உங்களுக்கும் இருந்தால் மிகச் சுலபமானதொரு தொழில் உள்ளது. அது துடைப்பம் தயாரிக்கும் தொழில். இதற்கு அதிகம் முதலீடு செய்யத் தேவையில்லை. குறைந்தளவுக்கு பணம் இருந்தாலே போதும்.
பெருக்குமாறு அல்லது விளக்குமாறு அல்லது துடைப்பம் இல்லாத வீடுகள் அலுவலகங்களே இருக்காது. வீட்டுக்கு வீடு வாசல் இருக்கிறதோ இல்லையோ அங்கு நிச்சயமாக துடைப்பம் இருக்கும். இன்றைய சூழலில் கிராமப்புறம் தொடங்கி நகரங்கள் முழுவதும் உள்ள கடைகள், சூப்பர் மார்க்கெட்களில் துடைப்பம் கிடைக்கிறது.

அந்தக்காலத்தில் எல்லாம் தெருவுக்குத்தெரு வந்து தென்னைமாறு என்று கூவி கூவி விற்பார்கள். இதில் மற்றொரு வகை உள்ளது பூமாறு. அது இப்போது பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. தென்னைமரத் தோகைகளில் உள்ள இலைகளின் நடுவே உள்ள நரம்பை பிரித்து தென்னை மாறு செய்வார்கள். தென்னை நாறுகளை ஒரு கயிற்றில் கட்டினால் போதும் துடைப்பம் ரெடி.
பூமாறு செய்வதற்கு இதற்கென பழுப்பு அல்லது இளம் மஞ்சள் நிறத்தில் குழல்போன்று தட்டையாக உயரமாக விளையும் ஒரு வகை புல்செடியை பயன்படுத்துவார்கள். இந்த பூச்செடியின் தண்டு ஒரு குழல்போன்றும் அதன் தலைப்பகுதியில் பொசுபொசுவென அடர்த்தியான குஞ்சம் போன்று வளர்ந்திருக்கும். இதைத்தான் பெருக்குவதற்கு பயன்படுத்துவார்கள். பூமாறு தண்டுகளை தென்னை மாற்றைப் போலவே ஒரு கயிற்றில் கட்டிப் பயன்படுத்தலாம்.
ஆனால் இப்போது சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும் பூமாறுகள் அனைத்தும் பிளாஸ்டிக் கைப்பிடி அமைக்கப்பட்டு உறுதியாக விற்கப்படுகிறது. பூமாறு வீட்டுக்குள் துடைப்பதற்கும், தென்னை மாறு வாசல், கழிவறை, குளியலறைகளைப் பெருக்குவதற்கும் பயன்படுத்தப்படும்.
இந்தத் துடைப்பத் தொழிலில் நல்ல லாபம் உள்ளதாக காதி மற்றும் கிராமியத் தொழில்கள் ஆணையம் கூறுகிறது. இந்த ஆணையக் குறிப்பின்படி துடைப்பம் உற்பத்திக்கு ஆகும் செலவுக்கணக்கு கீழ்க்கண்டவாறு கூறப்படுகிறது.
நிலம்- வாடகை அல்லது சொந்தம்
கட்டடம் மற்றும் கட்டுமானச் செலவு- ஆயிரத்து இருநூறு சதுர அடிக்கு ரூ.2 லட்சம்
ஆலை மற்றும் உபகரணம்- ரூ.150 லட்சம்
பர்னிச்சர்கள்- ரூ.45,000
முன்உற்பத்தி செலவுகள்- ரூ.1.93 லட்சம்
மொத்தம்- ரூ.5.88 லட்சம்
உற்பத்திக்கான பைனான்ஸ் வழிகள்-
சுய முதலீடு- 10 சதவீதமான ரூ.59,000
டெர்ம் லோன்- ரூ.3.56 லட்சம்
உற்பத்தி மூலதனம்- ரூ.1.74 லட்சம்
மொத்தம்- ரூ.5.88 லட்சம்
காதி ஆணையப்படி, உங்களது வருவாய் முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் ஆண்டுகளில் முறையே ரூ.23.94 லட்சம், ரூ.28.62 லட்சம், ரூ.30.51 லட்சம், ரூ.32.31 லட்சம், ரூ.32.40 லட்சத்தைப் பெறலாம்.
அதேவேளையில் நிகர லாபமாக முதல் ஆண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு, நான்காமாண்டு, ஐந்தாமாண்டில் ரூ.4.19 லட்சம், ரூ.5.07 லட்சம், ரூ.5.36 லட்சம், ரூ.5.57 லட்சம், ரூ.4.91 லட்சம் பெறலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications