இந்தியாவில் ஐந்து வயது குழந்தையால் ஒரு ரூபாய் கூட சம்பாதிக்க முடியாத நிலையில் கனடாவில் ஐந்து வயது பூர்த்தியாகி இருந்தால் ஆண்டுக்கு 62 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என ஸ்வீட் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கனடாவைச் சேர்ந்த ஸ்வீட் நிறுவனம் தங்களது தயாரிப்புகளை சுவைப்பதற்காக 62 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு ஆள் எடுக்க இருப்பதாக விளம்பரம் செய்துள்ளது.
இந்த விளம்பரம் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்த வேலையில் சேர பலர் விண்ணப்பம் செய்து வருகின்றனர்.
ஸ்வீட் நிறுவனம்
கனடாவை சேர்ந்த கேண்டி ஃபன்ஹவுஸ் (Candy Funhouse) என்ற ஸ்வீட் நிறுவனம் தலைமை ஸ்வீட் அதிகாரி என்ற பதவிக்கு விண்ணப்பம் செய்ய விளம்பரம் செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை ஸ்வீட் அதிகாரிக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் கனடிய டாலர் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணம் இந்திய ரூபாயில் 62 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமை ஸ்வீட் அதிகாரி
தலைமை ஸ்வீட் அதிகாரியின் வேலை என்பது இந்நிறுவனம் தயாரிக்கும் ஸ்வீட்களை சுவைத்து பார்த்து அதில் உள்ள நிறை குறைகளை நிறுவனத்திற்கு கூறவேண்டும். ஜாலியான வேலைதான் என்றாலும் ஸ்வீட் சாப்பிடுவதில் மிகவும் ஆர்வம், ஈடுபாடு கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பது முக்கிய நிபந்தனையாகும்.
5 வயது இருந்தால் போதும்
இந்த வேலையில் சேர்வதற்கு 5 வயது பூர்த்தி செய்தாலே போதும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஸ்வீட் மீது மிகவும் ஆர்வம் மற்றும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும் என்பதும் அவர் கூறும் பரிந்துரையின் அடிப்படையில் தான் இந்நிறுவனம் ஸ்வீட்டின் தரத்தை மாற்றி அமைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பம்
இந்த வேலையில் சேர ஆகஸ்ட் 31ஆம் தேதி கடைசி நாள் என்ற நிலையில் ஏராளமானோர் விண்ணப்பித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிறுவனத்தில் பணிக்கு விண்ணப்பம் https://candyfunhouse.ca/pages/careers என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஐந்து வயது பூர்த்தியான குழந்தையின் சார்பில் அவர்களுடைய பெற்றோரும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்வீட் மீதான காதல்
ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களை ஏன் வேலைக்கு எடுக்கின்றோம் என்பது குறித்து இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜமால் ஹெஜாசி அவர்கள் கூறும்போது ஸ்வீட் மீதான காதல் எந்த வயதிலும் இருக்கும் என்பதாலும், 5 முதல் 50 வயது வரை உள்ள அனைவருக்குமே ஸ்வீட் பிடிக்கும் என்பதாலும் இந்த வேலைக்கு 5 வயது பூர்த்தி செய்தால் போதும் என்ற நிபந்தனையை வைத்திருக்கின்றோம் என்று கூறியுள்ளார்.
கற்பனை - தைரியம்
எங்களது மிட்டாய் நிறுவனத்திற்கு கற்பனையை பங்களிக்க கூடிய ஒரு நபரை நாங்கள் தேடி வருகிறோம் என்றும், ஸ்வீட்டை சாப்பிடவுடன் ஏற்படும் கற்பனை மற்றும் தைரியமாக கருத்து சொல்லுதல் ஆகிய இரண்டு குணங்கள் இருந்தால் இந்த வேலைக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
பள்ளிக்கு செல்ல அனுமதி உண்டா?
5 வயது குழந்தையை வேலைக்கு எடுத்தால் அவர்கள் பகுதி நேரமாக பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்களா? என்பது குறித்த விபரங்கள் விளம்பரத்தில் இல்லை. 5 வயது முதல் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தாலும் ஸ்வீட் மீது காதல் உடைய ஒரு இளைஞரைத்தான் இந்நிறுவனம் வேலைக்கு எடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications