இந்தியாவில் உணவு டெலிவரி பிளாட்பார்ம்களை பயன்படுத்தி பிடித்த உணவுகளை ஆர்டர் செய்து உண்பது என்பது நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது. தற்போது நாம் 2025 ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம் .இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி நடப்பாண்டில் தங்களுடைய ஸ்விக்கி செயலி வாயிலாக எந்த உணவு அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டது என்பது குறித்த சுவாரசியமான தகவல்களை வெளியிட்டு இருக்கிறது.
இதன்படி இந்தியர்கள் அதிகமாக ஆர்டர் செய்த உணவுகளின் பட்டியலில் பிரியாணி ,பர்கர் ஆகியவை முதல் இடத்தை பிடித்திருக்கின்றன . 2025 ஆம் ஆண்டில் ஸ்விக்கி தளத்தில் மட்டும் 93 மில்லியன் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டு இருக்கின்றன . அதாவது ஒவ்வொரு நிமிடத்திற்கும் 194 பிரியாணி ஆர்டர் ஸ்விக்கிக்கு வந்திருக்கிறது .

இதில் 57.7 மில்லியன் சிக்கன் பிரியாணி ஆர்டர் தங்களுக்கு வந்ததாக ஸ்விக்கி சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து இருக்கிறது. அடுத்ததாக இந்தியர்கள் அதிகமாக ஆர்டர் செய்த உணவுகளின் பட்டியலில் பர்கர் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது . 44.2 மில்லியன் பர்கர் ஆர்டர்கள் மட்டுமே வந்திருக்கின்றன . மூன்றாவது இடத்தில் பீட்சா இருக்கிறது. 40.1 மில்லியன் பீட்சா ஆர்டர்கள் இந்த ஆண்டில் தங்களுடைய செயலியில் பதிவு செய்யப்பட்டதாக ஸ்விக்கி தெரிவித்திருக்கிறது .

அடுத்ததாக தோசை இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது 26.2 மில்லியன் தோசை ஆர்டர்கள் வந்ததாக ஸ்விக்கி நிறுவனத்தின் செய்தி குறிப்பிடுகிறது . குறிப்பாக பிற்பகல் 3 மணியிலிருந்து மாலை 7 மணி வரையிலான காலத்தில் அதிகமாக பர்கர் ஆர்டர் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதிலும் சிக்கன் பர்கர் தான் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டது. 6.3 மில்லியன் சிக்கன் பர்கர்களும் 4.2 மில்லியன் வெஜ் பர்கர்களும் ஆர்டர் செய்யப்பட்டு இருக்கின்றன .
அடுத்ததாக சிக்கன் ரோல், வெஜ் பீட்சா ,சிக்கன் நக்கட்ஸ் ஆகியவை அதிகமாக ரிப்பீட்டாக ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளின் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன. இந்தியர்கள் மாலையில் பருகி உண்ணக்கூடிய டீ மற்றும் சமோசாவின் ஆர்டர்களும் வெளுத்து வாங்கியுள்ளன. 3.42 மில்லியன் சமோசாக்களும் 2.9 மில்லியன் டீக்களும் ஸ்விக்கியில் ஆர்டர் செய்யப்பட்டிருக்கிறது. இனிப்பு வகைகளை பொறுத்தவரை ஒயிட் சாக்லேட் கேக் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் 47,106 ரூபாய்க்கு 65 டிரை ஃப்ரூட் குக்கிஸ் கிப்ட் பாக்ஸை வாங்கி இருக்கிறாராம். இது ஒரே சமயத்தில் அதிக தொகை கொண்டு செய்யப்பட்ட ஆர்டராகும். அதேபோல மும்பையை சேர்ந்த மற்றொரு நபர் 2025 ஆம் ஆண்டில் மட்டும் 3,196 உணவு ஆர்டர் செய்து இருக்கிறார் அப்படியே பார்க்கும்போது ஒரு நாளைக்கு ஒரு சராசரியாக 9 முறை ஸ்விக்கியில் உணவு ஆர்டர் செய்திருக்கிறார் .
பெங்களூருவை சேர்ந்த டெலிவரி பார்ட்னர் முகமது ரஸிக் 11,718 ஆர்டர்களையும் பெண்கள் பிரிவில் சென்னையை சேர்ந்த பூங்கொடி 8,196 ஆர்டர்களையும் டெலிவரி செய்து அதிக உணவு டெலிவரி செய்த பார்டனர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications