சென்னை: ஏப்ரல் மாதம் ரம்ஜானை முன்னிட்டு சுமார் 60 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் கிடைத்துள்ளதாக ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி கூறியுள்ளது. ஆன்லைன் உணவு விநியோக நிறுவனமான ஸ்விக்கி, மார்ச் 12 முதல் ஏப்ரல் 8 வரையிலான காலகட்டத்தில், வழக்கமான மாதங்களில் பெறப்பட்ட ஆர்டர்களோடு ஒப்பிடும்போது, பிரியாணி ஆர்டர்கள் 15 சதவீதம் உயர்ந்துள்ளதாக, ஏப்ரல் 10 அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஸ்விக்கி நிறுவனம் தனது அறிக்கையில், பாரம்பரிய மற்றும் பலருக்கு பிடித்தமான உணவான ஹலீம் மற்றும் சமோசா, இஃப்தார் அட்டவணையில் அதிக ஆர்டெர்க்ள் பெற்றுள்ளது என்றும், இதில் ஹைதராபாத்தில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரியாணி, மற்றும் 5.3 லட்சம் பிளேட் ஹலீம்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளது. மட்டன்களை கொண்டு செய்யப்படும் இந்த ஹலீம்கள், ரம்ஜான் காலத்தில் மட்டுமே கிடைக்கும் என்பதால் இவ்வளவு ஆர்டர்கள், கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

ரம்ஜான் மாதத்தில் சுமார் 60 லட்சம் பிரியாணி ஆர்டர்கள் கிடைத்ததாக இந்நிறுவனம் கூறியுள்ளது. வழக்கமான மாதங்களுடன் ஒப்பிடும்போது பிரியாணி ஆர்டர்கள் 15 சதவீதம் (மார்ச் 12 முதல் ஏப்ரல் 8 வரை) அதிகரித்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் ரம்ஜான் மாதத்தில் நோன்பு திறக்க, 5.30 முதல் 7.00 மணி வரை கிடைத்த இஃப்தார் ஆர்டர்கள் 34 சதவீதம் அதிகரித்துள்ளது. சாதாரண நாட்களை விட நாடு முழுவதும் பிரபலமாக உள்ள உணவுகளுக்கான ஆர்டர்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபிர்னி ஆர்டர்களில் 80.97 சதவீதம் அதிகரித்துள்ளது. மால்புவா ஆர்டர்கள் 79.09 சதவீதம் மற்றும் ஃபலூடா ஆர்டர்கள் 57.93 சதவீதம் அதிகரித்துள்ளன. நோன்பு காலத்தில், நோன்பு திறக்க, பலர் பயன்படுத்தும் பேரிச்சம்பழம் ஆர்டர்கள் 48.40 சதவீதம் அதிகரித்துள்ளன.
ரம்ஜானில் குறிப்பாக ஸ்வீட் ஷாப்கள், ஹைதராபாத் மும்பை, மீரட், போபால், லக்னோ, கொல்கத்தா போன்ற இடங்களில் பேரிச்சம் பழம், மால்புவா, ஃபிர்னி உள்ளிட்ட பல இஃப்தார் இனிப்பு உணவுகள், அதிக ஆர்டர்களை பெற்றதாக ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில், ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் படகுகளில் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும், டெலிவரி செய்யத் தொடங்கியுள்ளதாக ஸ்விக்கி அறிவித்தது. இதற்காக ஸ்விக்கி நிறுவனம், ஷிகாரா ஆபரேட்டர்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. அவர்கள் படகுகளில் தங்கி இருக்கும் பயணிகளுக்கு உணவு டெலிவரி செய்ய, உள்ளூர் டெலிவரி பார்ட்னர்களுக்கு உதவுவார்கள் என கூறப்படுகிறது. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ப சூடான உணவுகளை வழங்க முடியும் என எதிர்பார்க்கிறார்கள்.
இன்வெஸ்கோ தொடர்ந்து மூன்றாவது முறையாக ஸ்விக்கியின் மதிப்பை உயர்த்தி வருகிறது. இப்போது, அதன் மதிப்பு $8.5 பில்லியனாக உள்ளது, முன்பு $12.7 பில்லியனாக இருந்தது. அக்டோபர் 2023 முதல், ஸ்விக்கியின் மதிப்பு 49 சதவிகிதம் உயர்ந்துள்ளது, ஜனவரி 2022 முதல், அது 19 சதவீதம் அதிகரித்துள்ளது. ஸ்விக்கியின் கிட்டத்தட்ட 2 சதவிகித பங்குகளை இன்வெஸ்கோ வைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications