நஷ்டம் 2 மடங்கு உயர்வு.. பணிநீக்கம் உறுதி..? அச்சத்தில் ஊழியர்கள்..!

இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி சேவை துறை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருந்தாலும் இத்துறை நிறுவனங்களின் நஷ்ட அளவீட்டை சமாளிப்பது பெரும் சுமையாக உள்ளது.

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பின்பு சோமேட்டோ இதை சரியாக செய்துக்கொண்டு வரும் நிலையில், ஸ்விக்கி தொடர்ந்து பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் ஸ்விக்கி இந்த ஆண்டின் நஷ்ட அளவு 2 மடங்கு அதிகரித்துள்ளதால் விரைவில் செலவுகளை குறைக்கும் விதமாக ஊழியர்களை பணிநீக்கம் செய்ய துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்விக்கி

ஸ்விக்கி

ஆன்லைன் உணவு டெலிவரி தளமான ஸ்விக்கி நிறுவனத்தின் நஷ்ட அளவு, கடந்த நிதியாண்டில் 1,617 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் 3,629 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் நடப்பு நிதியாண்டில் மொத்த செலவுகள் 131 சதவீதம் அதிகரித்து 9,574.5 கோடி ரூபாயாக உள்ளது.

நிறுவனங்களின் பதிவாளர்

நிறுவனங்களின் பதிவாளர்

ஸ்விக்கி நிறுவனம் மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இயக்கும் நிறுவனங்களின் பதிவாளர் (RoC) அமைப்பிடம் சமர்ப்பித்த வருடாந்திர நிதிநிலை அறிக்கையின்படி, 2022 ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில், இன்வெஸ்கோ தலைமையிலான முதலீட்டு சுற்றில் 700 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை திரட்டிய நிலையில் ஸ்விக்கி decacorn ஆக உயர்ந்தது. அதாவது 10 பில்லியன் டாலர் மதிப்பீட்டை கொண்ட நிறுவனமாக உயர்ந்தது.

  வருவாய், செலவுகள்

வருவாய், செலவுகள்

ஸ்விக்கி நிறுவனத்தின் வருவாய் 2021 நிதியாண்டில் 2,547 கோடி ரூபாயிலிருந்து 2.2 மடங்கு அதிகரித்து 5,705 கோடி ரூபாயாக உள்ளது. இந்நிறுவனத்தின் பெரும் செலவாக அவுட்சோர்சிங் சப்போர்ட் காஸ்ட் உள்ளது. இது நிறுவனத்தின் மொத்த செலவினங்களில் அதாவது 9,574.5 கோடி ரூபாயில் 24.5 சதவீதமாகும்.

அவுட்சோர்சிங் சப்போர்ட்  செலவு

அவுட்சோர்சிங் சப்போர்ட் செலவு

இந்த குறிப்பிட்ட அவுட்சோர்சிங் சப்போர்ட் செலவு 2021 நிதியாண்டில் 1,031 கோடி ரூபாயில் இருந்து 2.3 மடங்கு அதிகரித்து 2022 ஆம் ஆண்டிள் 2,350 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

 விளம்பர செலவுகள்

விளம்பர செலவுகள்


ஸ்விக்கி நிறுவனத்தின் விளம்பர மற்றும் விளம்பரச் செலவுகள் 2022 ஆம் ஆண்டில் 4 மடங்கு அதிகரித்து 1,848.7 கோடி ரூபாய் அளவீட்டை எட்டியது என்று ஸ்விக்கி நிறுவனங்களின் பதிவாளர் அமைப்பில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஊழியர்கள் பணிநீக்கம்

ஊழியர்கள் பணிநீக்கம்

ஸ்விக்கி நிர்வாகம் தனது வருடாந்திர முடிவுகளை வெளியிடும் முன்பே அதாவது டிசம்பர் மாதம் துவக்கத்திலேயே நிதி நிலை காரணமாக செலவுகளை குறைக்கும் விதமாக ஸ்விக்கி 250 ஊழியர்கள் அல்லது மொத்த ஊழியர்களில் 5 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக தகவல் வெளியானது.

பணிநீக்கம் அவசியம்

பணிநீக்கம் அவசியம்

இந்த நிலையில் இருமடங்கு அதிக நஷ்டம், 131 சதவீத அதிக செலவுகள் என ஸ்விக்கி நிறுவனத்தின் நிலை மிகவும் மோசமாக இருக்கும் வேளையில் ஊழியர்கள் பணிநீக்கத்தை தடுக்க முடியாது. இதனால் எப்போது வேண்டுமானாலும் ஸ்விக்கி நிர்வாக பணிநீக்க அறிவிப்புகளை வெளியிடலாம்.

Dineout கைப்பற்றல்

Dineout கைப்பற்றல்

ஸ்விக்கி நிறுவனம் 2022 ஆம் ஆண்டில் Dineout என்ற உணவகத்தில் சென்று சாப்பிடும் சேவையை அளிக்கும் டெக் தளத்தை சுமார் 200 மில்லயன் டாலருக்கு கைப்பற்றியது. இதன் மூலம் அதிகளவிலான வர்த்தகத்தை பெற்றதா, வருவாய் ஈட்டியதா என்பதை ஸ்விக்கி தனது வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+