இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி மற்றும் ஆன்லைன் சேவை நிறுவனமான ஸ்விக்கி கடந்த 2 வருடங்களாகச் சிறப்பான வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இந்நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தனது பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
ஸ்விக்கி விவேக் சுந்தர்
ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான (COO) விவேக் சுந்தர் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அக்டோபர் மாதம் இப்பதவியை விட்டும், நிறுவனத்தை விட்டும் வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளார்.
3 வருட பணி
2018ல் ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகப் பதவியேற்ற விவேக் சுந்தர் 3 வருடத்திற்குப் பின் இந்நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளார். இந்நிலையில் தற்காலிகமாக இப்பதவியில் ஸ்விக்கி நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீஹர்ஷா மெஜெட்டி ஏற்க உள்ளார்.
500 நகரங்களுக்கு விரிவாக்கம்
விவேக் சுந்தர் கடந்த 3 வருடத்தில் ஸ்விக்கி நிறுவனத்தின் வர்த்தகத்தை நாட்டின் 500 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்தது மட்டும் அல்லாமல் ஆன் கிரவுட் பணிகளையும் பெரிய அளவில் மேம்படுத்தியுள்ளார். குறிப்பாகக் கொரோனா லாக்டவுன் காலத்தில் இப்பணிகள் மிகவும் வேகமாக நடந்துள்ளது.
விவேக் சுந்தர் ஐஐஎம் பட்டதாரி
ஐஐஎம் கல்கத்தா கல்லூரி பட்டதாரியான விவேக் சுந்தர் கடந்த 23 வருடமாக எப்எம்சிஜி துறையில் பணியாற்றியுள்ளார். சுமார் 20 வருடமாக ப்ரோக்டர் அண்ட் கேம்பெல் நிறுவனத்தில் பணியாற்றிய இவர், ஸ்விக்கி நிறுவனத்தில் இணைவதற்கு முன்பு P&G நிறுவனத்தின் ஆப்பிரிக்க வர்த்தகத்தின் தலைவராக இருந்தார்.
2வது உயர் அதிகாரி
கடந்த ஒரு வருடத்தில் ஸ்விக்கி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் 2வது உயர் அதிகாரி விவேக் சுந்தர், இதற்கு முன்பு ஸ்விக்கி நிறுவனத்தின் துணை நிறுவனரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான ராகுல் ஜய்மினி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
ஸ்விக்கி - சோமேட்டோ
ஒருபக்கம் ஸ்விக்கி நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான சோமேட்டோ ஐபிஓ வெளியிடத் தயாராகி வரும் நிலையில், ஸ்விக்கி நிறுவனத்தில் இருந்து தொடர்ந்து உயரதிகாரிகள் வெளியேறி வருகின்றனர்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications