உணவு டெலிவரி நிறுவனங்கள் நாம் விரும்பும் ரெஸ்டாரண்ட்களில் இருந்து பிடித்த உணவுகளை உடனடியாக டெலிவரி செய்து விடுகின்றன. இதன் மூலம் ஹோட்டலுக்கு வரமுடியாத வாடிக்கையாளர்களுக்குத் தேவையான உணவுகளை அவர்களது வீட்டுக்கே டெலிவரி செய்து வியாபாரத்தை பெருக்குகின்றன.
ஸ்விக்கி, சோமாட்டோ போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறிய ஹோட்டல்களில் இருந்து கூட விரும்பும் உணவுகளை டெலிவரி செய்கின்றன.
அண்மையில் ஒரு ஜோடி தங்களது திருமண நிச்சயதார்த்தத்துக்கு தேவையான உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளனர்.

இதுபற்றி எக்ஸில் பகிரப்பட்ட பதிவில் ஒரு ஸ்விக்கி டெலிவரி பாய் பல அடுக்குகளில் உணவுகளை ஒரு டெண்டில் அடுக்கி வைக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. திருமண நிச்சயதார்த்தத்துக்கு ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள் அவை. இந்தப் பதிவு வைரலாகியுள்ளது. ஏராளமானவர்கள் இதுபற்றி வேடிக்கையான பதிவுகளை இட்டுள்ளனர். இது ஸ்விக்கியின் கவனத்துக்கு வந்து அந்த நிறுவனமும் கருத்தை பதிவு செய்துள்ளது.
யாருமே செய்யாத அளவுக்கு இந்த ஜோடி எங்களது சேவையை பயன்படுத்தியுள்ளது. உங்களது வீட்டுத் திருமணத்துக்கும் இதுபோன்று ஆர்டர் செய்யுங்கள் என்று அதில் குறிப்பிட்டுள்ளது. ஒரு பதிவர், காபி மெஷின்களைக் கூட அவர்கள் ஆர்டர் செய்துள்ளனர். இதுபோன்று திருமணத்தில் கூட பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.
https://twitter.com/shhuushhh_/status/1820044545343521231
மற்றொருவர் அவர்கள் தங்களது அழைப்பிதழுடன் க்யூஆர் கோட்டையும் அளித்திருக்கலாம் என்று கூறியுள்ளார். வேறு ஒருவர் இதில் எந்தப் பிரச்னையும் இல்லை. உங்கள் திருமணம் உங்களது பார்ட்டி. மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள் என்று வாழ்த்தியுள்ளார்.
ஸ்விக்கி, சோமாட்டோ போன்ற உணவு டெலிவரிகள் வாடிக்கையாளர்கள் விரும்பும் நிகழ்ச்சிகள், விசேஷங்களுக்கு இதுபோன்று மொத்தமாகவும் உணவுகளை டெலிவரி செய்கின்றன.
இதுபோன்ற உணவு டெலிவரி நிறுவனங்களின் சேவை நாளுக்கு நாள் நாட்டில் பெருகிக் கொண்டே இருக்கிறது. தாங்கள் விரும்பும் உணவுகளை தங்களுக்குப் பிடித்த ஹோட்டல்களில் இருந்து விரும்பும் இடத்துக்கு மொத்தமாகவோ அல்லது தனிப்பட்டோ மக்கள் ஆர்டர் செய்து சாப்பிட்டு மகிழ்கின்றனர். மெனக்கெட்டு ஹோட்டலுக்குப் போய் காத்திருந்து சாப்பிடுவதைவிட தங்களது வீட்டுக்கே விரும்பிய சாப்பாட்டை வரவழைத்து சாப்பிடுவது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சௌகரியமாகப் போய்விட்டது.
இதுபோன்ற ஆர்டர்களினால் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கும் ஏகப்பட்ட லாபம் கிடைக்கிறது. அத்துடன் ஹோட்டல்களுக்கும் வியாபாரம் சூடு பிடிக்கிறது. இதனால் உணவு டெலிவரி நிறுவனங்களுக்கும் ஹோட்டல்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது.
உணவு டெலிவரி மூலம் ஹோட்டல்களிடம் இருந்து 20 சதவீதம் வரை நிறுவனங்களுக்கு கமிஷனும் கிடைக்கிறது. இதனால் டெலிவரி ஆர்டர்களை அதிகரிக்க உணவு டெலிவரி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான கவர்ச்சிகரமான சலுகைகள், டிஸ்கவுன்ட்களையும் தந்து லாபத்தை பெருக்குகின்றன.
Story Written by: jayachandran
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications