ஒரு நபர் நடுரோட்டில் சிக்கித் தவித்தபோது ஸ்விக்கி டெலிவரி ஏஜென்ட் எப்படி உதவினார் என்பது குறித்த டிவிட்டர் பதிவு ஸ்டார்ட்அப் ஊழியர்கள் மத்தியில் அதிகளவிலான கவனத்தை ஈர்த்து, அதிகளவில் பகிரப்பட்டு உள்ளது.
தி புராடக்ட் ட்ரீ என்னும் ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் நிறுவனரான ஷ்ரவன் டிக்கூ பெங்களூரில் உள்ள கோரமங்களாவில் இருந்து சர்ஜாபூர் சாலையில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது, அவரது பைக் திடீரென நின்றது. வண்டியில் பெட்ரோல் அளவை பார்க்காமல் கிளம்பியதால் வண்டியில் எரிபொருள் காலியாகி வண்டி பாதி வழியிலேயே நின்றுவிட்டது.

ஷ்ரவன் டிக்கூ எரிபொருளின்றித் தவித்த போது அடுத்தப் பெட்ரோல் பங்கு 2.5 கிமீ தொலைவில் இருந்ததைக் கூகுள் மேப் மூலம் தெரிந்துகொண்டார். பெட்ரோல் பங்கிற்குப் பைக்கை தள்ளிட்டு தான் போக முடியும் என வேறு வழி இல்லாமல் முடிவு செய்ததாக டிவிட்டரில் பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் தான் ஒரு ஸ்விக்கி டெலிவரி ஊழியர் என்னைப் பார்த்து, 'பையா க்யா ஹுவா ஹை?' என்றார், நான் அவருக்கு முழுச் சம்பவத்தையும் விளக்கினேன். அவர், 'பையா, நான் உங்களை அழைத்துச் செல்கிறேன்' என்று கூறி தன்னுடைய பைக்கைப் பயன்படுத்தி என் பைக்கை தள்ள தொடங்கினார் அந்த அற்புதமான மனிதர் என்று டிவிட்டரில் தெரிவித்தார் ஷ்ரவன் டிக்கூ.
ஸ்விக்கி ஊழியர் டோ செய்து என்னையும் என் பைக்-ஐயும் 2.5 கிமீ தூரம் தள்ளி சென்ற பிறகு, அருகில் உள்ள பெட்ரோல் பங்க்-கிற்குக் கொண்டு சேர்த்தோம். ஆனால் அந்தப் பங்க் மூடப்பட்டிருப்பதைக் காண நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.
உடனே ஷ்ரவன் டிக்கூ ஸ்விக்கி ஊழியரை மேலும் தொந்தரவு செய்யக் கூடாது என முடிவு செய்து... நான் அவருடைய உதவிக்கு நன்றி எனக் கூறிவிட்டு 500 ரூபாயை வழங்கினேன், ஆனால் அவர் அதை ஏற்க மறுத்தது மட்டும் அல்லாமல் அடுத்தப் பெட்ரோல் பங்கிற்கு டோ செய்தார்.
இதைத் தொடர்ந்து 3 கிமீ தொலைவில் உள்ள மற்றொரு பெட்ரோல் பங்கிற்கு இருவரும் வந்தோம். அதிர்ஷ்டவசமாக, அந்தப் பெட்ரோல் பங்க் திறந்திருந்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஷ்ரவன் டிக்கூ பணத்தை வழங்கினார் ஆனால் டெலிவரி ஊழியர் மறுத்தது மட்டும் அல்லாமல் அவர், இன்று நீ இத்தகையைச் சூழ்நிலையில் மாட்டியிருக்கலாம், நாளை அது நானாக இருக்கலாம். நான் உனக்கு உதவி செய்தேன், நாளை வேறு யாராவது எனக்கு உதவுவார்கள் என்று கூறியதாக ஷ்ரவன் டிக்கூ தனது டிவிட்டர் பதவில் தெரிவித்தார்.
அவருடைய பதிலில் நெகிழ்ந்து போன் ஷ்ரவன் டிக்கூ அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டு அதை டிவிட்டரில் பதிவிட்டார். ஷ்ரவன் டிக்கூ-வின் பதிவை இதுவரையில் 12000 பேர் பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications