ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக வேகமாக அனைத்து துறைகளிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக நம்முடைய அன்றாட வேலைகள் அனைத்தையும் ஏஐ தொழில்நுட்பம் படிப்படியாக மேற்கொண்டு வருகிறது. மனிதர்களுக்கு ஒரு உதவியாளர் போல செயல்படுவதற்கு ஏஐ கருவிகள் தயாராகி வருகின்றன.
தற்போது இந்தியாவில் உணவு பொருட்களை ஆர்டர் செய்து உண்ணக்கூடிய பழக்கம் வேகமாக அதிகரித்திருக்கிறது. ஸ்விக்கி , சோமேட்டோ போன்ற செயலிகளை மக்கள் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். குயிக் காமர்ஸ் முறையில் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை ஆர்டர் செய்கின்றனர். இனி இந்த வேலைகளை நாம் செய்ய வேண்டாம் ஏஐ கருவிகளே நமக்காக இந்த ஆர்டர்களை மேற்கொள்ளும்.

ஸ்விக்கி நிறுவனம் தங்களுடைய பயனர்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இனி தங்களின் வாடிக்கையாளர்கள் சாட் ஜிபிடி, கிளாட், ஜெமினி ஏஐ போன்ற செயலிகள் வாயிலாக ஸ்விக்கியில் உணவுகளையும் இன்ஸ்டாமார்ட்டில் மளிகை பொருட்களையும் ஆர்டர் செய்ய முடியும்.
தங்களின் வாடிக்கையாளர்கள் ஏஐ கருவிகளான சாட் ஜிபிடி, ஜெமினி ஏஐ, கிளாட் ஆகியவற்றை பயன்படுத்தி கொண்டு கட்டளையிட்டால் அவை இவர்களுக்கான ஆர்டர்களை பார்த்து கொள்ளுமாம். எனவே ஸ்விக்கி பயனர்கள் இனி தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களையும், உணவுகளையும் ஏஐ மூலம் ஆர்டர் செய்து கொள்ள முடியும் என தெரிவித்து இருக்கிறது.
Model context protocol என்ற முறையில் ஸிவிக்கி தன்னுடைய சேவைகளில் ஏஐ கருவிகளையும் இணைத்துள்ளது. வாடிக்கையாளர்கள் இதற்கான URL கொண்டு ஏஐ மற்றும் ஸ்விக்கியை இணைத்து கொண்டால் போதும். நீங்கள் ஸ்விக்கி செயலிலேயே ஓபன் செய்ய தேவையில்லை. தங்களுக்கு ஒரு தேவை ஏற்படும் போது சாட் ஜிபிடியில் எனக்கு இன்ஸ்டாமார்ட்டில் 1 கிலோ நெய் ஆர்டர் செய் என பிராம்ப்ட் கொடுத்தால் போதும். இந்த ஏஐ கருவியே இன்ஸ்டார்மார்ட் சென்று உங்களுக்காக நெய் ஆர்டர் செய்துவிடும் அதுவே கூப்பன் உள்ளிட்டவற்றையும் அப்ளை செய்துவிடும்.
அதே போல சென்னையில் உள்ள சிறந்த உணவகத்தில் எனக்கு பிரியாணி ஆர்டர் செய் என பிராம்ப்ட் கொடுத்தால் போதும். ஏஐ கருவியே அதிக ரேட்டிங் கொண்ட ஒரு உணவகத்தில் பிரியாணி ஆர்டர் செய்யும் ஏதேனும் சலுகைகள் இருந்தாலும் அப்ளை செய்து செக் அவுட்டுக்கு கொண்டு வந்துவிடும். பின்னர் நாம் பணம் செலுத்தினால் மட்டும் போதும்.
அதே போல நான் வீட்டில் காய்கறி பிரியாணி செய்ய திட்டமிடுகிறேன் அதற்கு தேவையான பொருட்களை எல்லாம் இன்ஸ்டாமார்ட்டில் ஆர்டர் செய் என கட்டளையிட்டால் போதும் அதுவே அனைத்தையும் ஆர்டர் செய்துவிடும். ஸ்விக்கி டைன் அவுட்டில் உணவகத்தில் டேபிள் கூட புக் செய்து கொடுக்குமாம். கூடிய விரைவில் ஈ காமர்ஸ், குயிக் காமர்ஸ் நிறுவனங்கள் அனைத்துமே ஏஐ கருவிகளோடு தங்களின் சேவைகளை இணைக்க திட்டமிட்டுள்ளன. எனவே வாடிக்கையாளராகிய நாம் பொருட்களை தேடுவதிலும் கூப்பன்கள், சலுகைகளை தேடுவதிலும் நேரத்தை வீணாக்க தேவையில்லை.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications