பெங்களூரு: ஸ்விக்கி என்கிற பெயரைச் சொன்ன உடன், உணவு டெலிவரி செய்யும் ஒரு அப்ளிகேஷன் என்று தான் நமக்கு எல்லாம் நினைவுக்கு வரும்.
ஆனால் இந்த கொரோனா வைரஸ் வந்த பின், அரிசி பருப்பு தொடங்கி அனைத்து மளிகை சாமான்களையும் டெலிவரி செய்யத் தொடங்கிவிட்டது ஸ்விக்கி.
வெறுமனே இருக்கும் ஊர்களில் டெலிவரி செய்து கொண்டிருந்தால் பரவாயில்லை. கொரோனாவை வைத்து வியாபாரத்தையும் பலமாக வளர்த்து இருக்கிறார்களே..!
விரிவாக்கம்
ஆன்லைன் உணவு டெலிவரி அப்ளிகேஷனான ஸ்விக்கி, தன் மளிகை சாமான் மற்றும் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் டெலிவரி சேவையை 125 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்து இருக்கிறது. கொரோனா வைரஸ் லாக் டவுன் காலத்திலும் எப்படி தன் டெலிவரி சேவையை விரிவாக்கம் செய்தது?
ஒப்பந்தம்
இந்தியாவின் FMCG - Fast Moving Consumer Goods கம்பெனிகளான ஹிந்துஸ்தான் யுனிலிவர், ப்ராக்டர் & கேம்பில், கோத்ரேஜ், டாபர், மேரிகோ, அதானி வில்மர், விஷால் மெகா மார்ட் போன்ற நிறுவனங்கள் மற்றும் மால்களுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு தன் டெலிவரி சேவையை 125 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்து இருக்கிறது ஸ்விக்கி.
சொமேட்டோ
ஸ்விக்கி தன் 125 நகர விரிவாக்க அறிவிப்பை வெளியிடுவதற்கு, சில தினங்களுக்கு முன்பு தான், சொமேட்டோ 80 நகரங்களுக்கு தன் அத்தியாவசியப் பொருட்கள் டெலிவரியை விரிவுபடுத்தியதாகச் சொன்னது குறிப்பிடத்தகக்து. ஆனால் ஸ்விக்கி மற்றும் ஒரு பெரிய முயற்சியை செய்யத் தொடங்கி இருக்கிறது.
சில்லறை வியாபாரிகள்
ஸ்விக்கி நிறுவனம், இந்த நெருக்கடியான சூழலில் கூட, செயின் சூப்பர் மார்க்கெட்கள், சில்லறை வியாபாரிகள், மருந்து கம்பெனி போன்றவர்களுடனும் ஒப்பந்தம் செய்து இருக்கிறது. இதன் படி, அருகாமையில் இருக்கும் ஸ்டோர்கள் மற்றும் டீலர்கள் வழியாக பொருட்களை டெலிவரி செய்யும் எனச் சொல்கிறது ஸ்விக்கி.
திட்டத்தில் உண்டு
மளிகை சாமான்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்வது எங்கள் நீண்ட கால திட்டங்களில் ஒன்றாகத் தான் இருந்தது. ஆனால் தற்போது, வாடிக்கையாளர்களின் நன்மைக்காக இந்த சேவையை விரைவாக மேம்படுத்தி வருகிறோம் என்கிறார் ஸ்விக்கி நிறுவனத்தின் முதன்மைச் செயல்பாட்டு அதிகாரி (COO) விவேக் சுந்தர்.
விரிவாக்கம் தொடரும்
அடுத்த சில வாரங்களுக்கு, இந்த 125 நகரங்களில், பல கடைகளுடன் ஒப்பந்தம் மேற்கொள்வோம். அதோடு எந்த நகரங்களில் எல்லாம், லோக்கல் அதிகாரிகள் அனுமதிக்கிறார்களோ அந்த நகரங்களில் எல்லாம் எங்கள் சேவையை விரிவாக்கம் செய்வோம். எனவும் சொல்லி இருக்கிறார் விவேக்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications