ஸ்விக்கி ஆப்பில் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்யாத ஸ்விக்கி நிறுவனத்துக்கு வாடிக்கையாளருக்கு இழப்பீடாக ரூ.5000 தர வேண்டும் என்று பெங்களூரு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஐஸ்கிரீமுக்கான ரூ.187ஐயும் வாடிக்கையாளருக்குத் திரும்பத் தருமாறு கூறியுள்ளது. ஸ்விக்கி சேவையில் குறைபாடு இருப்பதாகவும் இது நியாயமற்ற வணிக நடைமுறை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

பெங்களூரை சேர்ந்த ஒரு பெண் ஸ்விக்கி ஆப்பில் நட்டி டெத் ஆப் சாக்லெட் ஐஸ்கிரீமை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் பணத்தைப் பெற்றுக்கொண்ட ஸ்விக்கி ஐஸ்கிரீமை அவருக்கு டெலிவரி செய்யவில்லை. இதையடுத்து அந்தப் பெண் நுகர்வோர் வழக்கில் வழக்குத் தொடர்ந்தார்.
ஐஸ்கீரிம் கடையில் இருந்து ஐஸ்கிரீமை வாங்கிய டெலிவரி ஏஜெண்ட் அதை அந்தப் பெண்ணுக்கு டெலிவரி செய்யவில்லை. ஆனால் ஸ்விக்கி ஆப்பில் டெலிவரி செய்யப்பட்டதாக ஸ்டேட்டஸ் போடப்பட்டிருந்தது.
இதுபற்றி ஸ்விக்கி நிறுவனத்திடம் அந்தப் பெண் கேட்டபோது ஐஸ்கிரீமுக்கான பணத்தையும் திருப்பித் தரவில்லை.
ஆனால் நீதிமன்றத்தில் ஸ்விக்கி தான் ஒரு இடைத்தரகர் என்றும் தனது டெலிவரி ஏஜெண்ட் செய்த தவறுக்கு நிறுவனம் பொறுப்பாகாது என்று வாதிட்டது. இதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. ஸ்டேட்டஸில் டெலிவரி செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டாலும் அதை உறுதி செய்ய முடியவில்லை என்று கூறியது.
இருந்தாலும் ஸ்விக்கியின் வாதங்களை நீதிமன்றம் நிராகரித்தது. அத்துடன் ஸ்விக்கியின் சேவையில் குறைபாடு இருப்பதாகவும் அதனால் பணத்தை திரும்பத் தரவேண்டும் என்று உத்தரவிட்டது. பெங்களூரு அர்பன் இரண்டாவது கூடுதல் மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு கமிஷன் இந்த வழக்கை விசாரித்தது.
ஸ்விக்கியின் செயல் சேவை குறைபாடு உள்ளதாகவும் தவறான வணிக நடைமுறை என்றும் கமிஷன் தெரிவித்துள்ளது. இதையடுத்து வாடிக்கையாளருக்கு இழப்பீடாக ரூ.3000மும் வழக்குச் செலவாக ரூ.2000மும் ஸ்விக்கி தரவேண்டும் என உத்தரவிடப்பட்டது.
வாடிக்கையாளர் தனக்கு இழப்பீடாக ரூ.10,000மும் வழக்குச் செலவுக்கு ரூ.7500மும் தரவேண்டும் எனக் கோரியிருந்தார். ஆனால் இந்தத் தொகை மிகவும் அதிகம் என்று நீதிமன்றம் மறுத்துவிட்டது.
Story written by: I.Jayachandran


Click it and Unblock the Notifications