இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி சேவை வழங்கும் நிறுவனமான ஸ்விக்கி, சேவையை விரிவாக்கம் செய்யவும், வர்த்தகத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகப் புதிய முதலீட்டை ஈர்த்துள்ளது.
இந்த முறை நிறுவனத்தில் ஏற்கனவே முதலீடு செய்துள்ளவர்களை அணுகாமல் புதிதாகப் பால்கன் எட்ஜ், கோல்டுமேன் சாச்சீஸ், அமான்சா கேப்பிடல், திங்க் இன்வெஸ்ட்மென்ட்ஸ், கார்மிக்நாக் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து சுமார் 800 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்த்துள்ளதாக ஸ்லிக்கி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீஹர்ஷா மெஜிட்டி ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இப்புதிய முதலீடு மூலம் ஸ்விக்கி நிறுவனம் சுமார் 5 பில்லியன் டாலர் அளவில் மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆன்லைன் உணவு டெலிவரி சந்தையில் சோமேட்டோ உடன் போட்டிப்போட்டு வரும் நிலையில், இப்புதிய முதலீடு மூலம் தனது வர்த்தகத்தை வலிமைப்படுத்த முடியும்.
ஸ்விக்கி உடன் போட்டிப்போட்டு வரும் சேமேட்டோ கடந்த 2 முதலீட்டுச் சுற்றில் சுமார் 900 மில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை பெற்று இந்த வருடம் ஐபிஓ வெளியிட தயாராகி வருகிறது. மேலும் ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ மட்டுமே போட்டிப்போட்டு வரும் இந்தத் துறையில் தற்போது அமேசானும் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications