ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவு தரமானதா? வந்தாச்சு ஸ்விக்கி சீல்..!!

சென்னை: பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி (swiggy) தங்களுடைய செயலியில் ஸ்விக்கி சீல் (Swiggy Seal) என்ற ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது.

ஸ்விக்கி, ஸோமேட்டோ ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் உணவு பொருட்கள் டெலிவரியில் ஈடுபட்டுள்ளன. இதில் ஸ்விக்கி சுமார் 650 நகரங்களில் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்து வருகிறது.

ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவு தரமானதா? வந்தாச்சு ஸ்விக்கி சீல்..!!

தற்போது தங்களுடைய உணவு டெலிவரியின் ஒரு பகுதியாக உணவு தரத்தை மேம்படுத்தவும் சுத்தமான முறையில் உணவு தயாரிக்கப்படுகிறது மற்றும் டெலிவரி செய்யப்படுகிறது என்பதை உறுதி செய்யவும் ஸ்விக்கி சீல் என்ற ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது.

இதன்படி ஸ்விக்கி நிறுவனம் பல்வேறு உணவகங்களோடு இணைந்து இதனை நடைமுறைக்கு கொண்டு வர இருக்கிறது. சோதனை அடிப்படையில் இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே புனே நகரத்தில் ஸ்விக்கி சீல் என்ற நவீன அம்சம் கொண்டுவரப்பட்டது. நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் தங்கள் நிறுவனம் செயல்படக்கூடிய 650 நகரங்களிலும் இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வரும் என ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உணவுகளை ஆர்டர் செய்து வாங்கும் போது வாடிக்கையாளர்களுக்கு இந்த உணவு சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகிறது, மேலும் உணவு தர நிர்ணயத்திற்கு ஏற்ற முறையில் இது தயாரிக்கப்படுகிறது என்ற நம்பிக்கையை பெற வேண்டும் எனவே தான் ஸ்விக்கி என்ற ஒரு புதிய பேட்ஜை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம் என கூறியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட உணவகத்தில் என்ன மாதிரியான பாதுகாப்பு அம்சங்களோடு உணவு தயாரிக்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஸ்விக்கி சீல் என்ற பேட்ஜ் குறிப்பிட்ட உணவகத்திற்கு வழங்கப்படும், எனவே வாடிக்கையாளர்கள் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்யும் போது இந்த சீல் இருக்கிறதா என்பதை பார்த்து நம்பிக்கையுடன் அந்த உணவை வாங்கலாம் என தெரிவித்துள்ளது.

ஸ்விக்கி செயலியை ஓபன் செய்து செய்யும் போது உணவகங்களுக்கான மெனு பக்கத்திலேயே ஸ்விக்கி சீல் என்ற ஒரு பட்டன் காட்டும் இதில் உயர்தரமான உணவு மற்றும் சிறந்த முறையில் பேக்கேஜிங் செய்து சுத்தமான முறையில் உணவு தயாரித்து வழங்கும் நிறுவனங்களின் பட்டியல் இடம் பெற்று இருக்கும் என ஸ்விக்கி நிறுவனம் கூறியுள்ளது.

தங்களிடம் தற்போது 7 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருப்பதாகவும் அவர்கள் வழங்கக்கூடிய உணவகங்களுக்கான மதிப்பாய்வுகளின் அடிப்படையிலும் அவர்களின் பின்னூட்டங்களின் அடிப்படையிலும் இந்த ஸ்விக்கி சீல் என்ற மதிப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

டிக்கையாளர்களின் மதிப்பாய்வு மட்டும் இல்லாமல் உணவு தரத்தை நிர்ணயம் செய்யும் அமைப்புகளுடனும் இணைந்து இந்த ரேட்டிங் வழங்கப்படும் என கூறியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+