இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் உணவு மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி ஒவ்வொரு முக்கிய பண்டிகைக்கும் மக்களை கவரும் வகையில் விளையாட்டாகவும், சிரிப்பூட்டும் வகையிலும் விளம்பரம் செய்வது வழக்கம்.
அந்த வகையில் Holi பண்டிகைக்காக ஸ்விக்கி செய்த விளம்பரம் தற்போது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டும் அல்லாமல் டிவிட்டரில் #HinduPhobicSwiggy என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகும் அளவுக்கு இந்த பிரச்சனை பெரியதாக வெடித்துள்ளது. மேலும் பலர் ஸ்விக்கி நிறுவனம் ஹிந்துக்களின் மனதை புண்படுத்துகிறது என பல பிரபலமானவர்களும் ட்வீட் செய்துள்ளனர்.
அப்படி இந்த விளம்பரத்தில் என்ன தான் இருக்கு..? நாடு முழுவதும் மக்கள் ஸ்விக்கி மீது வெறுப்பை கொட்ட என்ன காரணம்..?
ஸ்விக்கி நிறுவனம்
ஸ்விக்கி நிறுவனம், ஹோலி பண்டிகைக்காக நாட்டின் பல பகுதியில் பெரிய பேனரில் விளம்பரம் செய்தது. இதில் இரண்டு கோழி முட்டை போட்டு ஆம்லெட் ஓகே, சன்னி சைட் அப் ஓகே, ஆனா Kisi ke sarr par அதாவது ஒரு தலையில் அடிப்பது தவறு என சிவப்பு நிறத்தில் X மார்க் போட்டு இருந்தது.
தவறாக விளையாட வேண்டாம்
இதோடு இந்த விளம்பரத்தின் கீவ் #BuraMatKhelo அதாவது தவறாக விளையாட வேண்டாம் என அறிவித்து ஹோலி பண்டிகைக்கான பொருட்களை ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது, வாங்கிக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளது.
விளம்பரம் பிரபலமானது
இந்த விளம்பரத்தை பெரிய அளவில் வைரலான நிலையில் ஒரு டிவிட்டர் வாசி ஸ்விக்கி நிறுவனத்தை டேக் செய்து ஈத் பண்டிகையின் போது, முஸ்லிம்கள் ஆடுகளை வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும் அல்லது கிறிஸ்துமஸ் சமயத்தில் மரங்களை வெட்டக் கூடாது என்று கிறிஸ்தவர்களை வலியுறுத்தும் அதே விளம்பரப் பலகையை நீங்கள் வைத்தீர்களா? உங்கள் இந்துவெறியை எங்கள் பண்டிகைகளில் இருந்து விலக்கிகொள்ளுங்கள், நாங்கள் விரும்பும் விதத்தில் ஹோலியை கொண்டாடுவோம் என தெரிவித்தார்.
இதில் #HinduPhobicSwiggy என்ற ஹேஷ்டேக்-ஐ போட்டு உள்ளார்.
எதிர் கருத்து
இந்த பதிவை இதுவரையில் 669 பேர் ரீட்வீட் செய்துள்ளனர், 24 பேர் கமெண்ட் செய்துள்ளனர். 1372 பேர் லைக் செய்துள்ளனர். இதே பதிவுக்கு கீழ் ஸ்விக்கி செய்த விளம்பரத்தில் என்ன தவறு முட்டையை சாப்பிட மட்டுமே பயன்படுத்துங்கள், ஹோலி பண்டிகையை கொண்டாட வேண்டாம் என தெரிவிக்கவில்லை, இதுவே தண்ணீரை சேமிக்கவும் என்று கூறியிருந்தால் கட்டாயம் தவறு என அதே டிவிட்டர் வாசி தெரிவித்துள்ளார். இதற்கும் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை இந்த ட்வீட்டுக்கு கீழ் பார்க்க முடியும்.
இஸ்கான் துணைத் தலைவர்
மேலும் இஸ்கான் துணைத் தலைவர் ராதாராமன் தாஸ் தனது டிவிட்டர் கணக்கில் "ஸ்விக்கி ஹோலி மீது இந்துக்களுக்கு அறிவுரை கூறும் அதே நிறுவனம் Swiggy, சைவ உணவு உண்பவர்கள் மற்றும் காய்கறி பொருட்களை ஆர்டர் செய்த சில வாடிக்கையாளர்களுக்கு அசைவ பொருட்களை அனுப்புவதில் பிரபலமானது: Swiggy #BuraMatBhejo. என்று ட்வீட் செய்துள்ளார்.
பிரபலங்கள் பதிவு
இவர்கள் மட்டும் அல்லாமல் அகில இந்திய சாது சமாஜ் உறுப்பினரும், கட்ச் சந்த் சமாஜத்தின் முன்னாள் தலைவருமான யோகி தேவ்நாத்,
சிவசேனா கட்சியின் முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி ஆகிய பல பிரபலங்கள் ஸ்விக்கி விளம்பரத்தை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
பிற பண்டிகை
மேலும் அன்ஷுல் சக்சேனால என்ற டிவிட்டர்-வாசி ஸ்விக்கி நிறுவனத்தின் பழைய கிறிஸ்மஸ், ஈத் பண்டிகை விளம்பர புகைப்படத்தை #HinduphobicSwiggy என்ற ஹேஷ்டேக் உடன் பதிவிட்டு உள்ளார்.
இதற்கு மக்களாகிய உங்களின் கருத்து என்ன..? கமெண்ட் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications