ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவனம் 2025ஆம் ஆண்டின் 'ஹவ் இந்தியா இன்ஸ்டாமார்ட்டட்' அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் குவிக் காமர்ஸ் வர்த்தகத்தை மக்கள் எப்படியெல்லாம் பயன்படுத்துகிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
மக்கள் இத்தளத்தில் அதிக மதிப்பு கொண்ட கேஜெட் முதல் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் வரை மக்கள் வாங்குகின்றனர். 2025ஆம் ஆண்டில் மக்கள் இத்தளத்தில் சிறிய ஆர்டர் மதிப்பாக ரூ.10 பிரின்ட் அவுட் முதல் பெரிய ஆர்டராக ரூ.4.3 லட்சம் ஐபோன் வரை மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

இத்தளத்தில் 10 நிமிட டெலிவரி சேவை மக்களுக்கு பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும் காரணத்தால் நகர்ப்புற மக்கள் மத்தியில் இது பெரிய அளவில் பயனுள்ளதாக உள்ளது.
அந்த மனசு தான் சார் கடவுள்
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர் டெலிவரி ஊழியர்களுக்கு சுமார் ரூ.68,600 டிப்ஸ் அளித்துள்ளார். இது நாட்டிலேயே அதிகபட்சமாக டிப்ஸ் அளிக்கப்பட்ட தொகையாகும்.
பெங்களூர் ஸ்பெஷல்
பெங்களூரு மக்கள் மத்தியில் கொரியன் சாஸ், இரவு நேர ஸ்நாக்ஸ் வாங்குதலில் முன்னிலையில் உள்ளனர். இதேபோல் சந்தையில் அறிமுகமாகும் புதிய பொருட்களை விரைவாக ஏற்கும் முறையிலும் பெங்களூரில் அதிகமாக உள்ளது.
ரெட் புல், பெட் சப்ளை
மும்பையில் ஒரு வாடிக்கையாளர் ரெட் புல் சுகர் ஃப்ரீ குளீர்பானம் மட்டும் ரூ.16.3 லட்சம் செலவு செய்து வாங்கியுள்ளார். இதேபோல் சென்னையில் ஒருவர் செல்லபிராணிகளுக்காக ரூ.2.41 லட்சம் செலவு செய்து இன்ஸ்டாமார்ட் தளத்தில் ஷாப்பிங் செய்துள்ளார். ஹைதராபாத்தில் ஒரே ஆர்டரில் 3 ஐபோன் வாங்கியது மூலம் ரூ.4.3 லட்சம் செலவு செய்துள்ளார்.
சிறு நகர வளர்ச்சி
குவிக் காமர்ஸ் தளத்தில் பெருநகர மக்கள் மட்டும் தான் அதிகம் ஷாப்பிங் செய்கிறார்கள் என்ற நிலை மாறி தற்போது சிறு நகரங்களில் ஆர்டர்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. உதாரணமாக இத்தளத்தில் ராஜ்கோட் பகுதியில் 2025ஆம் ஆண்டில் 10 மடங்கு வர்த்தகம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் லூதியானா 7 மடங்கு, புவனேஸ்வர் 4 மடங்கு வளர்ச்சி கண்டுள்ளன.
அதிகம் வாங்கப்பட்ட பொருட்கள்
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் தளத்தில் கறிவேப்பிலை, தயிர், முட்டை, பால், வாழைப்பழம் ஆகியவை அதிகளவில் திரும்ப திரும்ப வாங்கப்படும் பொருட்களில் முக்கியமானதாக உள்ளது. கொச்சியில் ஒருவர் 368 முறை கறிவேப்பிலை ஆர்டர் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications