ஒரு சில ஆண்டுகளாக இந்தியாவில் விரைவு வர்த்தகத் தளங்களின் அறிமுகம் அதிகரித்துள்ளது. இவை ஷாப்பிங் அனுபவத்தையே முற்றிலுமாக மாற்றியுள்ளது. மின்னல் வேகத்தில் அன்றாட தேவைப்படும் பொருட்களை விரைவு வர்த்தக தாளங்கள் டெலிவரி செய்கின்றன. உணவு, மளிகை பொருட்கள் என அனைத்தையும் வீட்டிலிருந்தே பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த தளங்கள் செயல்படுகின்றன.
இந்நிலையில் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டின் தலைமை செயல் அதிகாரியான ஸ்ரீஹர்ஷா மஜெட்டி இந்தத் தளத்தில் அதிகமாக ஆர்டர் செய்யப்படும் பொருள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். ஸ்விக்கி என்றதும் அதிக அளவில் உணவுப் பொருள் விற்பனையாகி இருக்கும் அல்லது மளிகை சாமான்கள் விற்பனையாகி இருக்கும் என்று உங்களுக்கு தோன்றலாம். அதுதான் கிடையாது. அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட பொருள் பெட்ஷீட்கள் தான்.

CNBC-TV18 நடத்திய குளோபல் லீடர்ஷிப் சப்மிட்டில் கலந்து கொண்டு பேசிய ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் CEO, மக்கள் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை எதை அதிகம் ஆர்டர் செய்கிறார்கள் தெரியுமா? மக்கள் பெட்ஷீட்களை தான் அதிகம் ஆர்டர் செய்கின்றனர் என்று கூறினார்.
அதேபோல ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் அதிகம் தேடப்பட்ட பொருளாக பேட்டரிகள் உள்ளன. விரைவான டெலிவரிகளில் பெட்ஷீட்கள் முன்னணியில் உள்ளது. குவிக் காமர்ஸ் மற்றும் பாரம்பரிய இ-காமர்ஸ் இடையே உள்ள வேறுபாடு குறித்தும் ஸ்ரீ ஹர்ஷா கூறினார்.
நிறுவனத்தின் சிஇஓ-வாக பதவியேற்ற பிறகு ஸ்ரீஹர்ஷா தான் சந்தித்த சவால்கள் குறித்தும் பேசியிருந்தார். எந்த ஒரு நிறுவனமானாலும் தொடக்கத்தில், தங்கள் நிறுவனத்தைப் பற்றி மக்களை தெரிந்து கொள்ள வைப்பது சவாலாக இருக்கும். அதே சவாலை ஸ்ரீஹர்ஷா சந்தித்ததாகவும், ஆனால் இப்போது மக்கள் தான் தங்களுடைய வெற்றிக்கு காரணம் என்றும் கூறியிருந்தார்.
விரைவு வர்த்தகத் தளங்கள் அதிகரித்து வருவது குறித்தும் ஸ்ரீஹர்ஷா குறிப்பிட்டிருந்தார். ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ மட்டுமின்றி பிற டெலிவரி தளங்களும் தொடர்ந்து அறிமுகமாகிறது. சந்தையில் 19-க்கும் மேற்பட்ட டெலிவரி தளங்கள் உள்ளது. இன்றைய மதிப்பின்படி விரைவு வர்த்தக தளங்களின் சந்தை 5.5 பில்லியன் டாலராக விரிவடைந்துள்ளது. இது இந்திய மதிப்புக்கு ரூ.50,000 கோடி. ஆரம்பத்தில் வெறும் மளிகை பொருட்களை மட்டுமே வழங்கி வந்த இந்த தலங்கள், இப்போது ஆடை, உபகரணங்கள் என அனைத்திலும் களமிறங்கி இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications