பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் தனது ஆர்டருக்கு இலவச தக்காளியைச் சேர்த்ததற்காக சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்துள்ளார். 500 கிராம் தக்காளி இலவசமாக வந்தாலும், அந்த நபர் தனது கார்ட்டிலிருந்து இந்த தேவையற்ற பொருளை நீக்க முடியாததால், ஸ்விக்கி மொபைல் அப்ளிகேஷன் தளத்தின் வடிவமைப்பை குறை கூறியுள்ளார். தனக்கு தக்காளி தேவை இல்லை என்றும் தனது எக்ஸ் தலத்தில் போஸ்ட் செய்துள்ளார்.
முன்பு ட்விட்டர் என்ற பெயரில் அழைக்கப்பட்ட X தளத்தில் பெங்களூரைச் சேர்ந்த ஒரு நபர் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ஆப் மிகவும் மோசமான வடிவமைப்பை கொண்டுள்ளது. எனது கார்ட்டில் ஒரு பொருள் தானாகவே சேர்க்கப்பட்டுள்ளது. எனக்கு தக்காளி வேண்டாம். ஆனால் அதை எனது கார்ட்டில் இருந்து அகற்ற முடியவில்லை. நான் தக்காளிக்கு காசு கொடுக்கவில்லை. இந்த தளத்தின் வடிவமைப்பு மிக மோசமாக உள்ளது என்று பதிவிட்டு இருந்தார்.

அதேபோல இந்த நபர் மற்றொரு ட்வீட்டில் இங்கு பிரச்சனை எனக்கு தக்காளி கிடைப்பதில் கிடையாது. பிரச்சனை என்னவென்றால் இந்த இ-காமெர்ஸ் தளம் அடிப்படையான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை. நான் எதை பெற விரும்புகிறேனோ நுகர்வோராக அதை மட்டும் முழுமையாக கட்டுப்படுத்த எனக்கு உரிமை உண்டு. ஆனால் அது இங்கு நடக்கவில்லை என்று எழுதி இருந்தார்.
இந்த போஸ்ட் 68,700 வியூஸுகளைப் பெற்றுள்ளது. அதில் ஒரு பயனர் வாடிக்கையாளரே இறுதியாக முடிவை எடுக்க வேண்டும். இலவசங்களை வழங்குங்கள்.. ஆனால் வாங்குபவர் அந்த பொருள் வேண்டும் அல்லது வேண்டாம் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். ஸ்விக்கி தன் மதிப்பை இழந்து வருகிறது, சொமேட்டோ அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது. வணிகங்களுக்கு லாபம் ஈட்டி நுகர்வோருக்கு சிறந்த சேவை வழங்கும் பிராண்ட் எங்களுக்கு தேவை என்று பதிவிட்டிருந்தார்.
இன்னொரு நபர் டார்க் ஸ்டோர்களில் அதிகளவு தக்காளி ஸ்டாக் உள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு அவற்றை யாருக்காவது கொடுத்து விட வேண்டும். உங்களுக்கு தேவையில்லை என்றால் வாட்ச்மேன் அல்லது வேறு யாருக்காவது கொடுத்து விடுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.
இன்னொரு பயனர், இப்போதெல்லாம் மக்கள் அனைத்திற்கும் குறை கூறுகின்றனர். ஃப்ரீயாக கிடைக்கும் பொருட்களை தேவைப்படுபவர்களுக்கு வழங்கலாம் என்று கூறியிருந்தார்.
வாடிக்கையாளர்களுக்கு தங்கள் ஆர்டரை முழுமையாகக் கட்டுப்படுத்தும் உரிமை இருக்க வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் தெளிவாக வலியுறுத்துகிறது. ஈ-காமர்ஸ் தளங்கள், வாடிக்கையாளர்களின் விருப்பத்தை மதித்து, அவர்களுக்கு தேவையான பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை குறைத்து, வணிகங்களுக்கு இழப்பை ஏற்படுத்தும் என்பதே பலரின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications