ஆன்லைன் உணவு டெலிவரி சேவை நிறுவனமான ஸ்விக்கி, பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவின் பல நகரங்களில் பைக் டாக்ஸி சேவையை அளித்து வரும் ரேபிடோ நிறுவனத்தில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக இரு நிறுவனங்களும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தையில் உள்ளது.
ஸ்விக்கி - ரேபிடோ
இந்த முதலீடு இரு நிறுவனங்கள் மத்தியில் உறுதியாகும் பட்சத்தில் ஸ்விக்கி தனது டெலிவரி சேவையைப் பெரிய அளவில் மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் விரைவாகவும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய முடியும். மேலும் ஸ்விக்கி நிறுவனத்தின் முதல் ஆட்டோமொபைல் துறை முதலீடாகவும் விளங்கும்.
பைக் டாக்ஸி சேவை
ஸ்விக்கி நிறுவனத்தின் துணையால் ரேபிடோவும் தனது பைக் டாக்ஸி சேவை பல நகரங்களுக்குப் புதிதாக விரிவாக்கம் செய்யக் கூடிய வாய்ப்பு இருக்கும் காரணத்தால் இந்த முதலீட்டு சுற்று இரு தரப்புக்கும் லாபகரமாக விளங்குகிறது. ரேபிடோ நிறுவனத்தில் ஸ்விக்கி 150 முதல் 200 மில்லியன் டாலர் வரையிலான தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளது.
சோமேட்டோ நிறுவனம்
சமீபத்தில் சோமேட்டோ நிறுவனமும் ரேபிடோ நிறுவனத்தில் முதலீடு செய்வதற்காகத் திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், கடையில் தோல்வியில் முடிந்தது. இதை வாய்ப்பாக ஸ்விக்கி எடுத்துக்கொண்டு உள்ளது. ஏற்கனவே சோமேட்டோ - ஸ்விக்கி மத்தியில் கடுமையான போட்டி இருக்கிறது. இந்நிலையில் ஸ்விக்கியின் இந்த முயற்சி அதிகப்படியான பலன் அளிக்கும்.
சோமேட்டோ
சோமேட்டோ நிறுவனம் ஐபிஓ வெளியிட்ட பின்பு தனது வர்த்தகத்தையும் சேவையும் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுப் பல நிறுவனத்தில் முதலீடு செய்தும், முதலீடு செய்யப் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது. இதன் படி சோமேட்டோ இதுவரை Blinkit (க்ரோபர்ஸ்), Shiprocket, மற்றும் Magicpin ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications