உணவு மற்றும் மளிகை பொருட்கள் டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி, அடுத்த வாரம் அதன் இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங் (IPO) மூலம் பங்குச் சந்தையில் அறிமுகமாகவுள்ளது. Swiggy IPO நவம்பர் 6 அன்று வெளியிடப்பட உள்ளது. இதன் மூலம் ஸ்விக்கி நிறுவனம் ரூ.11,000 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது. ஸ்விக்கி IPO திறக்கப்படுவதற்கு முன்னதாக, பொது பங்கு வெளியீடு பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஸ்விக்கி IPO தேதிகள்: ஸ்விக்கி லிமிடெட்டின் முதன்மை பங்கு வெளியீடு நவம்பர் மாதம் 6-ஆம் தேதி, புதன்கிழமை அன்று பொது வெளியீட்டுக்கு திறக்கப்பட்டு, நவம்பர் 8-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மூட உள்ளது.

ஸ்விக்கி ஐபிஓ பிரைஸ் பேண்ட்: ஸ்விக்கி ஐபிஓ ஒரு பங்கிற்கு ரூ.371 முதல் ரூ.390 வரை விலை நிர்ணயம் செய்துள்ளது.
ஸ்விக்கி ஐபிஓ சைஸ்: இந்த ஐபிஓ மூலம் ஸ்விக்கி நிறுவனம் ரூ.11,327.43 கோடியை திரட்ட உள்ளது.
ஸ்விக்கி IPO லாட் சைஸ்: ஸ்விக்கி IPO-க்கு விண்ணப்பிப்பதற்கான குறைந்தபட்ச லாட் சைஸ் 38 ஆகும். அதாவது, ஸ்விக்கி IPO-வில் பங்குகளை வாங்க விரும்பும் ஒருவர், குறைந்தபட்சம் 38 பங்குகளை வாங்க வேண்டும். ஸ்விக்கி நிறுவனம் தனது பங்குகளை அதிகபட்சமாக ஒரு பங்கு ரூ.390 விலைக்கு விற்பனை செய்ய முயற்சிக்கிறது. இந்த ஐபிஓ-வின் லாட் சைஸ் 38 என்பதால் ஒரு பங்குக்கு 390 என்று கணக்கிடும் பட்சத்தில் ஒரு முதலீட்டாளருக்கு ரூ.14,820 ரூபாய் தேவைப்படும்.
ஸ்விக்கி IPO OFS: OFS-இல் பங்குகளை விற்பனை செய்யும் முக்கிய பங்குதாரர்களில் Accel India IV (Mauritius) Ltd, Apoletto Asia Ltd, Alpha Wave Ventures, LP, Coatue PE Asia XI LLC, DST EuroAsia V B.V, Elevation Capital V Ltd, Inspired Elite Investments Ltd, MIH India Food Holdings B.V, Norwest Venture Partners VII-A Mauritius மற்றும் Tencent Cloud Europe B.V. போன்ற முக்கிய முதலீட்டு நிறுவனங்கள் அடங்கும்.
ஸ்விக்கி IPO-வின் முதன்மை நோக்கம்: ஸ்விக்கி நிறுவனம், இந்த IPO மூலம் கிடைக்கும் நிதியை பின்வரும் நோக்கங்களுக்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் கிளவுட் கட்டமைப்பை மேம்படுத்தவும், விரிவுபடுத்தவும் நிதி ஒதுக்கப்பட உள்ளது. பல்வேறு பிரிவுகளில் பிராண்ட் மார்க்கெட்டிங் மற்றும் வணிக மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காகவும் நிதி ஒதுக்கப்படவுள்ளது.
ஸ்விக்கி IPO ஒதுக்கீடு: ஸ்விக்கி IPO-வில் உள்ள பங்குகளில் சுமார் 75% பங்குகள் தகுதி வாய்ந்த நிறுவன ஏலதாரர்களுக்கும் (QIB), 15% நிகர வெளியீடு நிறுவனமற்ற முதலீட்டாளர்களுக்கும் (NII) மற்றும் 10% சில்லறை முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. நிறுவனம் ஊழியர்களுக்கு 7,50,000 பங்குகளை ஒதுக்கி வைத்துள்ளது மற்றும் அவர்களுக்கு வெளியீட்டு விலையை விட ரூ.25 தள்ளுபடியில் பங்குகளை வழங்குகிறது.
More From GoodReturns

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications