இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி தளமான ஸ்விக்கி ஐபிஓ முடிந்து, புதன்கிழமை (நவம்பர் 13) பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. ஸ்விக்கி நிறுவனத்தின் பங்குகள் அதன் IPO விலையான ரூ.390 ஐ விட 7.69% அதிகமாக என்எஸ்ஈ-இல் 420 ரூபாய்க்கும் மும்பை பங்குச்சந்தையில் 412 ரூபாய் என 5.64% பிரீமியம் விலையில் அறிமுகமானது.
இந்த வெற்றிகரமான ஸ்விக்கி ஐபிஓ மூலம் இந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. சுமார் 5,000 ஊழியர்களுக்கு ஸ்விக்கி நிறுவனம் துவங்கியதில் இருந்து அளிக்கப்பட்ட ESOP பங்குகளின் மூலம் சுமார் 9000 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி ஆதாரத்தை பெற்றுள்ளது. அதில் கிட்டத்தட்ட 500 பேர் கோடீஸ்வரர்களாக மாற உள்ளனர்.

2023 ஜூலையில், ஸ்விக்கி நிர்வாகம் ஏற்கனவே ரூ.500 கோடிக்கு மேல் ESOP பங்குகளை ஊழியர்களிடம் இருந்து பைபேக் செய்து லாபம் கொடுத்தது. தற்போது ஐபிஓ மூலம் ஒட்டுமொத்த ESOP பங்குகளின் மதிப்பு 9000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும், ஸ்விக்கி நிறுவனம் SEBI அமைப்பிடம் இருந்து ஐபிஓ வெளியிடும் போது முதலீட்டாளர்கள் கட்டாய ஒரு வருட லாக்-இன் கால விதிமுறைக்கு விலக்கு பெற்றுள்ளது. இந்த அனுமதி மூலம் ஸ்விக்கி ஊழியர்கள் IPO வெளியிட்ட பின்பு ஒரு மாதத்திற்குப் பிறகு தங்கள் பங்குகளை விற்பனை செய்ய முடியும்.
ஸ்விக்கி-யின் ரூ.11,300 கோடி IPO, 2021 இல் Paytm இன் ஐபிஓ-வுக்கு பிறகு ஒரு டெக் நிறுவனத்தின் மிகப்பெரிய ஐபிஓ-வாக உள்ளது. இந்த ஐபிஓ மூலம் அதிகம் சம்பாதிக்கும் டாப் 10 பேர் பட்டியல் இதுதான்.
| பெயர் | பதவி | ESOP பங்குகளின் மதிப்பு (கோடிகளில்) |
| ஸ்ரீஹர்ஷ மேஜட்டி | Cofounder & Group CEO | 1894.11 |
| அமிதேஷ் ஜா | CEO Instamart | 126.41 |
| ரோஹித் கபூர் | CEO Food Marketplace | 92.63 |
| ராகுல் போத்ரா | Chief Financial Officer | 81.73 |
| மதுசூதன ராவ் | Chief Technology Officer | 81.73 |
| கிரிஷ் மேனன் | Chief Human Resources Officer | 81.73 |
| ஃபனி கிஷன் | Cofounder and Chief Growth Officer | 81.73 |
| நந்தன் ரெட்டி | Cofounder and Head of Innovation | 81.73 |
| அஸ்வத் சுவாமிநாதன் | Ex-Chief Growth and Marketing Officer | 54.48 |
ஸ்விக்கி 500 கோடீஸ்வரர்களை உருவாக்கியது போல் சோமேட்டோ 18 மில்லியனர்களை உருவாக்கியது, பேடிஎம் ஐபிஓ 350 ஊழியர்களை கோடீஸ்வரராக்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications