நாட்டின் முன்னணி உணவு மற்றும் மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் ஆன்லைன் தளமான ஸ்விக்கி அதன் ஐபிஓவை வெளியிட செபியின் ஒப்புதலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 1.25 பில்லியன் டாலர் அளவிற்கு நிறுவனம் ஐபிஓ வெளியிடலாம் என்று கூறப்பட்டுகிறது. நிறுவனம் இப்போது புதுப்பிக்கப்பட்ட ரெட் ஹெர்ரிங் ப்ரோஸ்பெக்டஸை தாக்கல் செய்யும். இது 21 நாள் பொது கருத்துகளை பெறுவதை அனுமதிக்கிறது.
இதற்கிடையில் ஸ்விக்கியின் இந்த ஐபிஓ புதிய மூலதனமாக ரூ.3,750 கோடியையும், விற்பனைக்கான சலுகை மூலம் ரூ.6,664 கோடியையும் திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Prosus மற்றும் SoftBank போன்ற முக்கிய முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளில் ஒரு பகுதியை விற்கலாம் என்று கூறப்படுகிறது.

பெங்களூருவை தளமாகக் கொண்ட ஸ்விக்கி அதன் 1.25 பில்லியன் டாலர் ஐபிஓவிற்காக இந்த ஆண்டு ஏப்ரலில் ரகசியத் தாக்கல் செய்யும் வழியின் மூலம் சந்தை கட்டுப்பாட்டாளர் செபியிடம் ஐபிஓவுக்கான வரைவுத் தாள்களை தாக்கல் செய்தது. தற்போது செபி ஒப்புதல் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்காக ஸ்விக்கி இப்போது புதுப்பிக்கப்பட்ட ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை (UDRHP) செபியிடம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த புதிய புதுப்பிக்கப்பட்ட தாக்கலில் ஐபிஓ தொடங்கும் முன் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அனுமதிக்கப்படும். இதற்காக 21 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.
ஸ்விக்கியின் 33% பங்குகளைக் மிகப்பெரிய பங்குதாரரான Prosus போன்ற முக்கிய முதலீட்டாளர்கள் மற்றும் SoftBank தங்கள் பங்குகளில் ஒரு பகுதியை ஆஃபர் ஃபார் சேல் மூலம் விற்க வாய்ப்புள்ளது. அதேபோல், மற்ற முக்கிய முதலீட்டாளர்களில் அச்செல் (Accel), எலிவேஷன் கேபிட்டல் (Elevation Capital), மெயிடுவான் (Meituan), டென்செண்ட் (Tencent), நார்வெஸ்ட் வென்சர் பார்ட்னர் (Norwest Venture Partners), டிஎஸ்டி குளோபல் (DST Global), கோவட்யூ (Coatue), இன்வெஸ்கோ (Invesco) மற்றும் ஜிஐசி (GIC) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
இதற்கிடையில், நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், ஸ்விக்கி ரூ.1,600 கோடி நஷ்டத்துடன் ரூ.5,476 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அதன் முக்கிய போட்டியாளரான ஜொமாட்டோ, மார்ச் 31, 2024 இல் முடிவடைந்த ஆண்டில் ரூ.12,114 கோடி வருவாயைப் பதிவுசெய்தது. அதே காலகட்டத்தில் ரூ.351 கோடி நிகர லாபத்துடன் லாபம் ஈட்டியுள்ளது.
ஜொமாட்டோ ஜூலை 2021 இல் அதன் ஐபிஓ மூலம் ரூ. 9,375 கோடியை திரட்டியது. நிஃப்டியின் 32% ஆதாயத்துடன் ஒப்பிடும்போது, கடந்த ஆண்டில் பங்கு 192% உயர்ந்துள்ளது. ஐபிஓவின் போது முதலில் 76 ரூபாய்க்கு வழங்கப்பட்ட ஜொமாட்டோ பங்குகள் இன்று 291.70 ரூபாயில் முடிந்தது.
முன்னதாக செபி 2022 ஆம் ஆண்டில் முன் தாக்கல் (pre-filing) செய்யும் வழியை அறிமுகப்படுத்தியது. இது நிறுவனங்களை பூர்வாங்கத் தாக்கல்களின் விவரங்களை ரகசியமாக வைத்திருக்க அனுமதிக்கிறது. அதேபோல், நிறுவனங்களுக்கு வெளியீட்டு அளவைத் தீர்மானிப்பதில் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. இதனால், புதுப்பிக்கப்பட்ட வரைவு ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் வரை முன்மொழியப்பட்ட புதிய பங்குகளின் எண்ணிக்கையை 50% வரை சரிசெய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications