இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி தளமான SWIGGY பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெற்றிகரமான ஐபிஓ செயல்பாடுகளை முடித்து இன்று பங்குச் சந்தையில் சிறப்பான விலையில் பட்டியலிடப்பட்டு, ஐபிஓ முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
இன்று தேசிய பங்குச் சந்தையில் (NSE) பட்டியலிடப்பட்ட ஸ்விக்கி பங்குகள் ஐபிஓ-வில் நிர்ணயிக்கப்பட்ட ரூ.390 விலையை விட 7.69% அதிகமாக, ரூ.420-க்கு பட்டியலிடப்பட்டு தனது வர்த்தகத்தை துவங்கியது. அதேபோல், மும்பை பங்குச் சந்தையில் (BSE) ரூ.412-க்கு தொடங்கி, 5.64% பிரீமியத்துடன் வர்த்தகத்தை தொடங்கியது.

இந்த IPO-வில் விற்பனை செய்யப்பட்ட பங்குகளுக்கு மூன்று மடங்கு அதிகமாக முதலீட்டு விருப்பங்கள் குவிந்து பெரும் வெற்றியை சந்தித்தது என்றாலும், ஸ்விக்கியின் நிலையான வருவாய் வளர்ச்சி உசன் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவது முதலிட்டாளர்களுக்கு நெருடலாகவே உள்ளது.
SWIGGY இந்த IPO மூலம் பெறும் நிதியை திரட்டியுள்ளது, இந்த பணத்தை அதன் துணை நிறுவனமான Scootsy-ல் முதலீடு செய்வதற்கும், தொழில்நுட்பம் மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், பிராண்ட் மார்க்கெட்டிங் மற்றும் வணிகத்தை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்த உள்ளதாக தனது DRHP அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
இந்தியாவில் SWIGGY நிறுவனத்திற்கு போட்டியாளர் என்றால் அது Zomato தான், தற்போது இரு நிறுவனங்களும் குவிக் காமர்ஸ் பிரிவில் மளிகை பொருட்கள் முதல் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஹோம் டெலிவரி சேவையை அறிமுகம் செய்வதில் பெரும் கவனம் செலுத்தி வருகிறது.
இதேபோல் குவிக் காமர்ஸ் பிரிவில் தற்போது ஸ்விக்கி, சோமேட்டோ, செப்டோ ஆகிய 3 பெரும் நிறுவனங்களும் 10 நிமிடத்திற்குள் பொருட்களை டெலிவரி செய்யும் "குவிக்-காமர்ஸ்" மாடலை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
IPO-வில் பங்குகள் கிடைக்காத முதலீட்டாளர்களுக்கு, விலை நிலைபெறும் வரை காத்திருந்து, பின்னர் சிறந்த விலையில் மீண்டும் பங்குகளை வாங்குவது நல்லது என தமிழ் குட்ரிட்டன்ஸ் தளம் பிரிந்துரை செய்கிறது. அவசரப்பட்டு முதல் நாள் வாங்க வேண்டாம் எனவும் அறிவறுத்துகிறது.ய
மார்ச் 2024-ல் முடிவடைந்த நிதியாண்டில், ஸ்விக்கி நிறுவனத்தின் நஷ்டம் ரூ.2,350 கோடியாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் ரூ.4,179 கோடி மற்றும் 2022 ஆம் நிதியாண்டில் ரூ.3,628 கோடியுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளது. இருப்பினும், நிறுவனத்தின் இயக்க வருவாய் 2024 ஆம் நிதியாண்டில் ரூ.5,704 கோடியிலிருந்து ரூ.11,247 கோடியாக இரட்டிப்பு வளர்ச்சி அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications