இந்திய டெக் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அடுத்தடுத்து ஐபிஓ வெளியிட்டு வரும் வேளையில, இன்று நாட்டின் முன்னணி உணவு டெலிவரி தளமான SWIGGY வெற்றிகரமாக ஐபிஓ செயல்பாடுகளை முடித்துவிட்டு பங்குச் சந்தையில் இன்று ப்ரீமியம் விலை பட்டியலிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஸ்விக்கி நிறுவனத்தின் சக போட்டியாளரான சோமேட்டோ ட்விட்டரில், பங்குச்சந்தையில் ஸ்விக்கியின் வருகையையொட்டி கியூட்டாக ஒரு பதிவை செய்துள்ளது. இதற்கு கேப்ஷனாக நீயும், நானும்.. இந்த அழகான உலகத்தில் என குறிப்பிட்டு உள்ளது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக ஸ்விக்கி இது ஜெய் மற்றும் வீரு வைப் கொடுக்கிறது என தெரிவித்துள்ளது. மேலும் சோமேட்டோ தலைவர் தீபேந்தர் கோயல் டிவிட்டரில் வாழ்த்துக்கள் ஸ்விக்கி. இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் உதவ உன்னைவிட சிறந்த தோழமை யாரும் இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
சந்தையில் வர்த்தகத்தை கைப்பற்ற குடுமிபிடி சண்டை போடும் ஸ்விக்கி, சோமேட்டோ தற்போது நட்பு பாராட்டுவதை பார்க்கும் போது பலருக்கும் இருக்கும் கேள்வி நீங்க நல்லவரா, கெட்டவரா என்பது தான். இந்திய ஐடி நிறுவனங்கள் பிரஷ்ஷர்ஸ் சம்பளத்தை ஒன்று சேர்ந்து கட்டுப்படுத்துவது போலவே ஸ்விக்கி, சோமேட்டோ-வும் பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்தும் போது ஒன்று சேர்ந்துவிடுகிறது.

இன்று தேசிய பங்குச் சந்தையில் (NSE) பட்டியலிடப்பட்ட ஸ்விக்கி பங்குகள் ஐபிஓ-வில் நிர்ணயிக்கப்பட்ட ரூ.390 விலையை விட 7.69% அதிகமாக, ரூ.420-க்கு பட்டியலிடப்பட்டு தனது வர்த்தகத்தை துவங்கியது. அதேபோல், மும்பை பங்குச் சந்தையில் (BSE) ரூ.412-க்கு தொடங்கி, 5.64% பிரீமியத்துடன் வர்த்தகத்தை தொடங்கியது.
மதியம் ஒரு மணி அளவில் மும்பை பங்குச்சந்தையில் ஸ்விக்கி பங்குகள் 4.02 சதவீதம் உயர்ந்து 428.55 ரூபாய் அளவில் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல் நேசிய பங்குச்சந்தையில் 2.81 சதவீத உயர்வுடன் 431.80 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.

இதேவேளையில் ஸ்விக்கி ஐபிஓ-வில் பெரும் பகுதி பங்குகளை விற்பனை செய்த Prosus NV சுமார் 2 பில்லியன் டாலர் அதாவது 17000 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை பெற்றது. Prosus NV மற்றும் அதன் தாய் நிறுவனமான Naspers Ltd இதுவரையில் ஸ்விக்கியில் 1.3 பில்லியன் டாலர் முதலீடு செய்து சுமார் 31 சதவீத பங்குகளை வைத்திருந்தது.
இந்த ஐபிஓ-வில் 25 சதவீதம் பங்குகளை மட்டுமே வைத்துக்கொண்டு மற்ற பங்குகளை விற்பனை செய்தது மூலம் 2 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை பெற்றுள்ளது. தற்போது ஸ்விக்கி சுமார் 11.3 பில்லயன் டாலர் அளவுக்கு மதிப்பிடப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications