உணவு டெலிவரியில் ஈடுபட்டு வரக்கூடிய ஸ்விக்கி நிறுவனம் புதுப்புது முயற்சிகளை எடுத்த வண்ணம் இருக்கிறது . ஏற்கனவே ஸ்விக்கி பல்வேறு பிரிவுகளில் ஆறு புதிய செயலிகளை அறிமுகம் செய்திருக்கிறது.
குயிக் காமர்ஸுக்கு இன்ஸ்டாமார்ட் (instamart) , திண்பண்டங்களுக்கு ஸ்நாக்ஸ் (snacc) , டைனோவுட்(dineout) என்ற நாம் உணவகத்திற்கு சென்று உணவருந்துவதற்கான ஒரு செயலியை கொண்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் பல்வேறு புதிய செயலிகளை ஸ்விக்கி நிறுவனம் அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களுக்கு பல வகையான சேவைகளை வழங்கி வருவது. தற்போது Toing என்ற ஒரு புதிய செயலியை கொண்டு வந்திருக்கிறது .

இந்தியாவில் ஆன்லைன் உணவு டெலிவரி செயலிகள் தொடங்கப்பட்டு தொடக்கத்தில் மிக வேகமான வளர்ச்சியை பெற்றன. ஆனால் அண்மைக்காலமாக இவற்றின் வளர்ச்சி குறைந்திருக்கிறது. கடைகள் சென்று வாங்குவதைவிட இத்தகைய செயலிகள் வாயிலாக வாங்கும் போது அதிகம் செலவிடுவதை மக்கள் கவனத்தில் கொள்வதால் இந்த உணவு டெலிவரி சேவை துறைகளின் வளர்ச்சி என்பது சற்றே மந்தமடைந்திருக்கிறது.
இந்த சூழலில் தான் மலிவு விலையில் உணவு ஆர்டர் செய்து உண்பவர்களுக்காகவே Toing என்ற ஒரு செயலியை ஸ்விக்கி நிறுவனம் அறிமுகம் செய்திருக்கிறது. முதல் கட்டமாக புனேவில் பயன்பாட்டுக்கு வரக்கூடிய இந்த செயலி பின்னர் பெங்களூரு மற்றும் பல்வேறு நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. கல்லூரி செல்லக்கூடிய மாணவர்கள், ஃபிரஷர்களாக வேலைக்கு செல்பவர்கள் , குறைந்த வருமானம் ஈட்டுபவர்கள் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்ய வேண்டும் ஆனால் என்னிடம் பெரிய அளவில் தொகை இல்லை என்பவர்களுக்காகவே இந்த பிரத்தியேகமான Toing செயலியை அறிமுகம் செய்திருப்பதாக ஸ்விக்கி கூறுகிறது .
இதில் மீல்ஸ் 100 ரூபாயிலிருந்து 150 ரூபாய்க்குள் கிடைக்கும் என்றும் உங்களுக்கு அருகில் குறைந்த விலையில் உணவு விற்பனை செய்யும் கடைகளின் பட்டியல் காண்பிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய் இருந்தாலே ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து உண்ண முடியும் என்ற ஒரு சூழலை கொண்டு வருவதற்கும் ஸ்விக்கி இப்படி ஒரு செயலியை கொண்டு வந்துள்ளது.
ஏற்கனவே ரேபிடோ Ownly என்ற பெயரில் குறைந்த விலை கொண்ட உணவுகளை டெலிவரி செய்வதற்கான ஒரு செயலியை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது. அதற்கு போட்டியாக தான் ஸ்விக்கி தற்போது Toing செயலியை கொண்டு வந்திருக்கிறது. ஸ்விக்கியின் Snacc செயலியில் குறைந்த விலை கொண்ட கேன்டீன் டைப் உணவுகளை நாம் டெலிவரி பெறலாம், அதே போல under 99 என்ற வசதியும் உள்ளது. இதில் 99 ரூபாய்க்கும் கீழ் உள்ள உணவுகளை டெலிவரி பெறலாம். தற்போது Toingஇல் 100 மற்றும் 150 ரூபாய் வரையிலான விலை கொண்டு சாப்பாடுகளை ஆர்டர் பெற முடியும்.


Click it and Unblock the Notifications