பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்விக்கி அதன் குவிக் காமர்ஸ் பிளாட்பார்மான ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட்டில் புதிய பிரீமியம் மளிகை சாமான் டெலிவரியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைக்கு ஹேண்டு பிக்டு என்று ஸ்விக்கி நிறுவனம் பெயரிட்டுள்ளது.
ஹேண்டு பிக்டு சர்வீஸ் மூலம் ஆர்கானிக், ஃபார்ம் பிரஷ் காய்கறிகள் மற்றும் உள்ளூர் மளிகைச் சாமான்கள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் ஆப்பில் கீழ்ப்புறத்தின் வலது மூலையில் ஹேண்டு பிக்டு சர்வீஸ்கான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் உயர்தரமான பொருட்கள், குக்கீஸ், ஹோம் மேடு பனீர், பிரஷ்ஷாக பேக் செய்யப்பட்ட பிரட் மற்றும் பலவிதமான பொருட்களும் மசாலா பொருட்களும் கிடைக்கும்.
ஸ்விக்கி முன்னதாக இதேபோன்றதொரு பிரீமியம் மளிகை சாமான் டெலிவரி சேவையை இன்சேன்லி குட் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியது. அது இப்போது வேறொரு ஆப்பில் கிடைக்கிறது.
இந்த சேவை இன்ஸ்டாமார்டில் மார்ச் மாதத்தில் இணைக்கப்பட்டது. அத்தோடு ஸ்விக்கி இப்போது ஹேண்டுபிக்டு என்ற சேவையையும் வைத்திருந்தது. அதில் பிரீமியம் பொருட்கள் அடுத்த நாளில் டெலிவரி செய்யப்படும். ஆனால் இந்த ஹேண்டுபிக்டு சர்வீஸ் 2023 மே மாதத்தில் நிறுத்தப்பட்டது.
இப்போது ஹேண்டுபிக்டு சேவையை மீண்டும் ஸ்விக்கி தொடங்கியுள்ளது. இது குவிக் காமர்ஸ் மாடலில் சில மாற்றங்களுடன் வழங்கப்படுகிறது. ஆர்டர் செய்த 10 நிமிடங்களுக்குள் டெலிவரி செய்யும் வசதியும் உள்ளது. இதனால் பிரஷ்ஷான, அசல் தயாரிப்புகள் வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதமாகக் கிடைக்கும்.
ஹேண்டுபிக்டு சர்வீஸ் மூலம் 500 பிராண்டுகள், லோக்கல் மற்றும் பாப்புலரான ஐயங்கார்ஸ், ஸ்வீட் காரம் காபி, புளூ டோகாய், தி ஹோல் ட்ரூத், நோடோ, மாஸ்டர்சௌவ் தயாரிப்புகள் கிடைக்கும்.
இந்த தேர்வு செய்யப்பட்ட தயாரிப்புகள் நிச்சயமாக பெருமளவில் தயாரிக்கப்படும் பொருட்களாக இருக்கும் என ஸ்விக்கி கூறியுள்ளது.
இப்போதைக்கு ஹேண்டுபிக்டு சர்வீஸ் பெங்களூரில் மட்டும் செயல்படுகிறது. விரைவில் தில்லி, மும்பைக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
மற்ற முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தும் முன்னதாக ஹேண்டுபிக்டு சேவை எப்படி இருக்கிறது என்பதை அறிய பெங்களூரில் முதலில் ஹேண்ட்பிக்டு சர்வீஸ் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்படும். இது ஸ்விக்கியின் குவிக் வர்த்தக சந்தையில் தனது நிலையைப் புதுப்பித்து தக்கவைத்துக்கொள்ளும் உத்தியின் ஒரு பகுதியாகும். அங்கு அது சோமாட்டோவில் பிளிங்கிட் மற்றும் ஜெப்டோ போன்ற போட்டியாளர்களை எதிர்கொள்கிறது.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications